சு சமுத்திரம்

சு.சமுத்திரம் தமிழகத்தின் இடதுசாரி எழுத்தாளர்களில் ஒருவர். முற்போக்கு அழகியல் கொண்டவை அவருடைய கதைகள். ஆனால் தமிழக முற்போக்கு இலக்கியத்தில் இருந்த யதார்த்தவாதம் இயல்புவாதம் ஆகியவற்றுக்கு மாற்றாக அவை உணர்ச்சிகரமான பிரச்சாரத்தன்மை கொண்டிருந்தன. சு.சமுத்திரம் முற்போக்கு அணியிலிருந்த பொதுவாசிப்புக்குரிய எழுத்தாளர் என்று வரையறை செய்யலாம் .நேரடியாக மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்தமையாலும் மெய்யான சமூகப்பிரச்சினைகளைப் பேசியமையாலும் அவை பரவலாக வாசிக்கப்பட்டன. ஆனால் உரத்த மிகைக்குரல் கொண்டவை, வடிவநுட்பமோ மொழியழகோ அற்றவை என அழகியல்நோக்கில் விமர்சிக்கப்பட்டன.

சு சமுத்திரம்

சு சமுத்திரம்
சு சமுத்திரம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையாத் வஷேம் – இரு தேசங்களின் கதை: சுதா ஶ்ரீனிவாசன்
அடுத்த கட்டுரைகுற்றவுணர்வை வெல்லுதல்