முந்தி உமக்கும் எனக்கும் பேச்சுண்டோ
மோசப்படுத்த நான் வேசி என்பது கண்டோ
வந்தவர்கள் எல்லாம் வசை சொல்லி நகையாரோ
மருவ ஆசை உண்டானால் பொன்னுடன்
மனையினை தேடி இரவினில் வாரும்
ஆழ்வாரப் பிள்ளை எழுதியதாகச் சொல்லப்படும் இந்த பாடல் அன்றைய பொதுரசனையின் தரம் எப்படி என்று காட்டுவது. அன்றைய நடனமகளிரின் நடனத்திற்குரியது இது. கு.அழகிரிசாமி இப்பாடலை ஒரு வயதான பெண்ணிடமிருந்து எழுதிக்கொண்டார்.