பனிமனிதனின் தடம்

பனிமனிதன் வாங்க

ஜெ,

அண்மையில் பனி மனிதன் (யெதி) பற்றி பிபிசி வெளியிட்டிருந்த செய்திக்கட்டுரையை வாசித்தேன். அந்த தொன்மநம்பிக்கையின் அறிவியல் சாத்தியக்கூறுகள், அந்த நம்பிக்கை வளர்ந்த விதம் ஆகியவற்றை மிக விரிவாக பேசிய கட்டுரை அது. அதை வாசித்தபோது பனிமனிதன் எங்கள் உங்கள் நாவல் நினைவுக்கு வந்தது. டிண்டின் இன் நேப்பாள் என்னும் காமிக்ஸிலும் பனிமனிதன் ஒரு கதாபாத்திரம். ஆனால் பனிமனிதன் நாவல் யெதியை முன்வைத்து அறிவியல், ஆன்மிகம் என இரண்டையும் மிக நுட்பமாகவும் சுவாரசியமாகவும் சொல்லும் சிறுவர் நாவல். ஆனால் பெரியவர்களுக்கேக்கூட அது மிகப்பெரிய அனுபவத்தை அளிப்பதாக உள்ளது. தமிழில் நான் வாசித்த மிகச்சிறந்த குழந்தைகள் நாவல் இது. குழந்தைகளுக்கு வெறும் கதையை மட்டும் கொடுக்காமல் அறிவியலையும் சரித்திரத்தையும் கொடுக்கவேண்டும் என நினைப்பவர்களுக்குரிய நூல்.

ராஜேந்திரன் பெரியசாமி

பனிமனிதன் பற்றி பிபிசி

முந்தைய கட்டுரைகுற்றமும் பழியும், கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுந்தரவனம், வாசிப்பு