வல்லினம் ஜனவரி 2023 இதழ் வெளியாகியுள்ளது. வல்லினம் இதழில் சில ஆண்டுகளாக ஜனவரியில் என் கதை ஒன்று வெளியாகிறது. இந்த ஆண்டும் ஒரு கதை. ‘தொலைவில் எங்கோ’. ஓர் அறிவியல் புனைகதை. காலம் எனும் விந்தை குறித்த ஒரு கற்பனை.
விஷ்ணுபுரம் விழாவில் மலேசிய எழுத்தாளர் எஸ்.எம்.ஷாகீர் ஆற்றிய உரையும் அவருடனான வாசகர்களின் உரையாடலின் பதிவும் வெளியாகியுள்ளது.
தெய்வீகன், ரா.செந்தில்குமார், லோகேஷ் ரகுராமன் ஆகியோரின் சிறுகதைகளும் அஜிதன், தயாஜி எழுதிய குறுங்கதைகளும் வெளியாகியுள்ளன. ஒரே இதழில் நானும் அஜிதனும் எழுதுவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன்.