பைபிள் அறிமுக வகுப்புகள்- அறிவிப்பு

அறிவியக்கச் செயல்பாட்டில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு பைபிள் முன்வைக்கும் மெய்யியலிலும் கவித்துவத்திலும் ஆர்வமிருக்கும். தமிழிலக்கியத்தில் பைபிளின் குறிப்புகள் மற்றும் படிமங்கள் ஏராளம். ஏனென்றால் உலக இலக்கியத்தில் பைபிள் சாராம்சமாக கரைந்துள்ளது. ஆனால் முறையாக ஓர் அறிமுகம் , தொடர் வாசிப்பு பலருக்கும் இங்கே இருக்காது.

அவ்வண்ணம் ஓர் அறிமுகத்தை நிகழ்த்தவேண்டும் என்னும் எண்ணத்தால் ஒரு பயிற்சி வகுப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது பைபிளின் வரலாற்றுப் பின்புலம், அதன் மையப்படிமங்கள், அதன் அமைப்பு, அதன் மெய்யியல் ஆகியவற்றைப் பற்றிய அறிமுகம். மதம் சார்ந்த பயிற்சியோ வழிபாடோ அல்ல. அறிவியக்கம் சார்ந்தவர்களுக்குரியது. மதம்சார்ந்து அதை கொள்பவர்கள் தங்கள் அளவில் அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்

வழக்கம்போல நமக்குரிய இத்தகைய வகுப்புகளை அறிவியக்கம் பற்றி, நவீன இலக்கியம் பற்றி அறிந்த ஒருவரே நிகழ்த்த முடியும். நண்பர் சிறில் அலெக்ஸ் இவ்வகுப்புகளை நடத்துகிறார். கத்தோலிக்க மதகுருவுக்கான படிப்பில் ஈடுபட்டு பின்னர் மென்பொருள் வல்லுநர் ஆக ஆனவர் சிறில் அலெக்ஸ். முட்டம் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். ராய் மாக்ஶாம் எழுதிய இரு நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்

அனைவரும் பங்கேற்கலாம். இது மதநிகழ்வு அல்ல. ஆகவே மதம் சார்ந்த பிரார்த்தனைகள் போன்ற எவையும் இல்லை. இது பயிலும் வகுப்பு மட்டுமே. (பிரார்த்தனை செய்ய விரும்புபவர்கள் செய்யலாம்) ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் வரும் ஜனவரி 19 ,20 மற்றும் 21ஆம் தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) இந்நிகழ்வு நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் எழுதலாம்

[email protected]

முந்தைய கட்டுரைராமச்சந்திரகுகாவுடன் உரையாடல் (தொடர்ச்சி)
அடுத்த கட்டுரைகுருகு