எம்.பி.டி.ஆச்சாரியா

தமிழ் விக்கி பதிவுகளை என் வாசகர்களிலேயே குறைவானவர்களே வாசிக்கிறார்கள். வாசகர்கள் தமிழ் விக்கிக்கு அளிக்கவேண்டிய குறைந்தபட்ச பங்களிப்பு என்பது அந்த மூலக்கட்டுரைக்கு ஒரு வருகையை அளிப்பது மட்டுமே. ஆனால் அதையும் பலர் செய்வதில்லை. புனைவுகளை எழுதுபவர்கள் கிட்டத்தட்ட படிப்பதே இல்லை. தமிழில் புனைவு எழுதுபவர்கள் தங்கள் சொந்த குடும்பவாழ்க்கைச்சூழலுக்கு வெளியே ஒன்றை எழுத எண்ணுவது அரிதினும் அரிது

அப்படி எழுத எண்ணுபவர்களுக்கு திகைப்பூட்டும் வாழ்க்கைக் களங்கள் தமிழ் விக்கியில் உள்ளன. சாதாரண கலைக்களஞ்சியம் அல்ல அப்பதிவுகள். அவை ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றினூடாகச் சென்று வாசிப்பவர்கள் பெருநாவல்களுக்கு நிகரான வாழ்க்கைச்சித்திரத்தை அடைய முடியும்.

அத்தகைய வாழ்க்கைகளில் ஒன்று எம்.பி.திருமலாச்சாரியாருடையது

எம்.பி.திருமலாச்சாரியார்

எம்.பி.திருமலாச்சாரியார்
எம்.பி.திருமலாச்சாரியார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைA Fine Thread and Other Stories
அடுத்த கட்டுரைதேன்நடனம்