ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் சிறுகதை இயற்கை குறித்தும் , வன உயிர்கள் குறித்துமான அக்கறையையும் கவனத்தையும் கோருகிறது , டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எனும் மகத்தான மனிதரை உலகிற்குச் சரியான பார்வையில் அறிமுகப்படுத்துகிறது .
இந்த கதை சமூகத்திற்குப் பரவாலாகப் போய் சேர்வதன் மூலம் வன உயிர்கள் குறித்தான விழிப்புணர்வு உண்டாகும் என்ற நோக்கில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்,யானை டாக்டர் சிறுகதையை 40 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகமாக அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கிறோம் , முதல்கட்டமாக 6000 பிரதிகள் (பிரதிக்கு ரூ.மூன்று செலவானது) அச்சிட்டுள்ளோம்.மொழிபெயர்ப்பை ஆங்கிலத்திலும் அச்சடிக்க உள்ளோம் .
கல்லூரிகள் , நிறுவனங்கள் , சூழல் ஆர்வலர்கள் ,வனக்காப்பகங்களுக்கு இந்த பிரதி அளிக்கப்படவேண்டுமென விரும்புகிறோம் , எங்களிடமுள்ள பிரதிகளை சரியான இடத்திற்கு உங்களால் கொண்டுசேர்க்க இயலுமானால் எங்களிடமிருந்து பெற்று வினியோகிக்கலாம் நண்பர்களே .
இந்தக் கதையைப் பொறுத்தவரை திறந்த காப்புரிமை வழங்கப்படுகிறது , யார் வேண்டுமாயினும் சுருக்காமல் , வெட்டி ஒட்டாமல் அச்சிட்டு வழங்கலாம் (ஒரு மின்னஞ்சலில் அறியப்படுத்தினால் போதுமானது),அச்சடிக்க விரும்புவோர் 94421 10123 , [email protected] தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
இந்த நூலை வினியோகிக்க விரும்பும் நண்பர்கள் உங்கள் முகவரி விவரங்களை இங்கே நிரப்புங்கள் , பிரதிகளை அனுப்பி வைக்கிறோம் ,
இந்த பிரதிகள் மறுஅச்சிட செலவை பகிர்ந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புகொள்ளலாம்.
மேலும் http://vishnupuram.wordpress.com/2011/07/06/123/