விஷ்ணுபுரம் விருந்தினர்கள் இதுவரை

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்கள் 2010 ஆம் ஆண்டு முதல் பங்கெடுத்து வருகிறார்கள். தொடக்க காலத்தில் நிதி மிகமிகக்குறைவாக இருந்தமையால் சொந்தச்செலவில் வந்து செல்பவர்களையே அழைத்தோம். திரைப்படத்துறை ஆளுமைகள் என் மேல் கொண்ட மதிப்பால் அவ்வாறு கலந்துகொண்டனர். இளையராஜாவின் வருகைக்குக் கூட நாங்கள் ஒரு பைசா செலவிடவில்லை என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். மணிரத்னம் , இளையராஜா, வெற்றிமாறன், நாசர், வசந்த், வசந்தபாலன், பாரதிராஜா, பாலா உள்ளிட்ட திரை ஆளுமைகளுக்கு அவ்வகையில் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

புகழ்மிக்க விருந்தினர் ஏன் தேவை என நினைத்தோம் என்றால் இவ்விருதின் மதிப்பு ஊடகங்களுக்கும் விருதுபெறுபவர்களின் குடும்பத்தினருக்கும் தெரியவேண்டும் என்பதற்காகத்தான். அது நிகழ்ந்து இவ்விருது தன்னளவிலேயே முக்கியமானதாக ஆனபின் இந்திய அளவில் அறியப்பட்ட, அறியப்படவேண்டிய இலக்கிய ஆளுமைகளை அழைக்கலானோம். இவ்வாண்டுமுதல் உலக அளவில் எழுத்தாளர்களை அழைக்க தொடங்கியுள்ளோம்.

நாங்கள் வெறுமே விருந்தினர்களை அழைப்பதில்லை. அவர்களை விரிவாக அறிமுகம் செய்கிறோம். அவர்களின் படைப்புகளை மொழியாக்கம் செய்து வெளியிடுகிறோம். அவை பின்னர் நூல்களாக வெளிவந்துள்ளன. ஜெனிஸ் பரியத், மமங்தாய், கே.ஜி.சங்கரப்பிள்ளை, கல்பற்றா நாராயணன், சின்னவீரபத்ருடு, அனிதா அக்னிஹோத்ரி, மதுபால், ஜான்னவி பருவா, எச்.எஸ்.சிவப்பிரகாஷ் போன்றவர்களின் படைப்புகளை தமிழில் கொண்டுவந்தோம். இந்த தளத்திலேயே அவற்றைப் படிக்கலாம். ஆகவே அவர்களுடனான விவாதங்களும் சிறப்பாக அமைந்தன.

இவ்வாண்டு எஸ்.எம்.ஷாகீர், ராமச்சந்திர குகா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

2010 விருதுபெற்றவர் ஆ.மாதவன்

மணிரத்னம்

வேதசகாயகுமார்

புனத்தில் குஞ்ஞப்துல்லா

2011  விருதுபெற்றவர் பூமணி

பிரதீபா நந்தகுமார்

பாரதிராஜா

எஸ்.ராமகிருஷ்ணன்

2012 விருதுபெற்றவர் தேவதேவன்

இளையராஜா

நாஞ்சில்நாடன்

கல்பற்றா நாராயணன்

2013 விருதுபெற்றவர் தெளிவத்தை ஜோசப்

பாலா

இந்திரா பார்த்தசாரதி

2014 விருதுபெற்றவர் ஞானக்கூத்தன்

புவியரசு

வசந்தபாலன்

சா.கந்தசாமி

2015 விருதுபெற்றவர் தேவதச்சன்

வெற்றிமாறன்

யுவன் சந்திரசேகர்

ஜோ டி குரூஸ்

2016விருதுபெற்றவர் வண்ணதாசன்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ்

நாசர்

இரா முருகன்

கு சிவராமன்

பவா செல்லத்துரை

2017 விருதுபெற்றவர் சீ முத்துசாமி

ஜனிஸ் பரியத்
பி.ஏ.கிருஷ்ணன்

ம.நவீன்

2018 விருதுபெற்றவர் ராஜ் கௌதமன்

அனிதா அக்னிஹோத்ரி

தேவிபாரதி

ஸ்டாலின் ராஜாங்கம்

மதுபால்

2019ல் விருது பெற்றவர் கவிஞர் அபி

 

சிறப்பு விருந்தினர்கள்

ரவி சுப்ரமணியம்
பெருந்தேவி
ஜான்னவி பரூவா
கே.ஜி.சங்கரப்பிள்ளை

2020 விருது பெற்றவர் சுரேஷ்குமார இந்திரஜித்

 

2020 விருது கோவிட் காலமானதனால் அறைக்குள் நடத்தப்பட்டது நண்பர் ராம்குமார் இ.ஆ.ப விருது அளித்தார்.

ராம்குமார்

2021 விருது பெற்றவர் கவிஞர் விக்ரமாதித்யன்

சிறப்பு விருந்தினர்கள்

ஜெய்ராம் ரமேஷ்

இயக்குநர் வசந்த்

எழுத்தாளர் சோ.தர்மன்

சின்னவீரபத்ருடு

2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவர் சாரு நிவேதிதா

சிறப்பு விருந்தினர்கள்

மமங் தய், அருணாசலப்பிரதேச எழுத்தாளர்

போகன் சங்கர்

காளி பிரசாத்

முந்தைய கட்டுரையுவன்,நான்
அடுத்த கட்டுரைஅம்புலிமாமா