பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தனித்தமிழியக்கம் தமிழ்மொழியின் தனித்தன்மையை முன்னிறுத்தியமையால் சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்த இலக்கண நூல்கள் அறிஞர்களின் கவனத்திலிருந்து விலகி அழியத்தலைப்பட்டன. அவற்றில் பௌத்த, சமணநூல்களும் பல உண்டு. சம்ஸ்கிருத அறிஞரான கோபாலையர் அந்நூல்களை பிழைநோக்கி செம்பதிப்பாக வெளியிட்டு மீண்டும் ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
தமிழ் விக்கி தி. வே. கோபாலையர்