யுவன் சந்திரசேகர் பற்றி என் தளத்தில் 2008ல் இந்த தளம் தொடங்கிய காலம் முதலே கட்டுரைகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. பெரும்பாலானவை மறுபிரசுரமும் ஆகியுள்ளன. தமிழின் முக்கியமான இளம்படைப்பாளிகள், விமர்சகர்கள் அவற்றை எழுதியிருக்கின்றனர். ஏறத்தாழ 200 கட்டுரைகள், குறிப்புகள் இந்த தளத்தில் யுவன் சந்திரசேகர் பற்றி உள்ளன என்று தொகுப்பு காட்டுகிறது. இந்த தருணத்தில் ஒரு மறுவாசிப்புக்காக.