விஷ்ணுபுரம் விருதுகள், நினைவுகள்

ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விழாவின் இனிமைகளிலொன்று பழைய விழாக்களின் நினைவுகளை எடுத்துப்பார்ப்பது. இந்நிகழ்வின் தொடக்கம் முதல் இருப்பவர்கள் அனேகமாக அனைவரும் இன்றும் உள்ளனர். ஆனால் மிகப்பெரும்பகுதியாக உள்ளவர்கள் சென்ற ஆண்டுகளில் வந்தமைந்த இளைய தலைமுறையினர். அவர்களில் பலர் வாசகர்களாக அறிமுகமாகி எழுத்தாளர்களாக ஆனவர்கள்.

விஷ்ணுபுரம் அமைப்பு கே.வி.அரங்கசாமி முயற்சியால் 2010ல் தொடங்கப்பட்டது. இதற்கு உறுதியான நிர்வாக அமைப்பு இல்லை. ஆர்வம் கொண்ட எவரும் எடுத்துச்செய்யலாம். அவ்வகையில் வந்தமையும் நண்பர்களால் மிக வெற்றிகரமாக நிகழ்ந்துவருகிறது. ஒவ்வொரு அண்டும் பெரியதாகி, மேலும் மேலும் புதிய களங்களுக்குச் செல்கிறது. அவ்வகையில் மொத்த தமிழிலக்கிய வரலாற்றிலும் நீண்டகாலம் வெற்றியுடன் செயல்படும் இலக்கிய அமைப்பு இதுவே.

விஷ்ணுபுரம் இலக்கிய விருதுகள் 2010 முதல் ஆண்டுதோறும் அளிக்கப்படுகின்றன. இது 14 ஆவது விருது. ஒவ்வொரு ஆண்டும் விருதுவிழா பெரிதாகிக்கொண்டே செல்கிறது. தொடங்கும்போது விருதுத்தொகை ஐம்பதாயிரம். இம்முறை பத்து மடங்கு, ஐந்து லட்சம். தமிழின் சாதனையாளர்களான படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இவ்விருது மலேசிய, இலங்கைப் படைப்பாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இன்று இவ்விருது தமிழகத்தின் முதன்மையான இலக்கிய விருது என ஐயமில்லாமல் நிறுவப்பட்டுவிட்டது. தொகையால் மட்டுமல்ல. இவ்விருதை ஒட்டி ஓர் இலக்கியவாதிக்குக் கிடைக்கும் கவனம் வேறெந்த விருதிலும் கிடைப்பதில்லை. இன்று உலகமெங்கும் அந்தக் கவனத்தை உருவாக்கி அளிக்க முயற்சி எடுத்துக்கொள்கிறோம். ஆவணப்படங்கள், விமர்சனநூல்கள், கருத்தரங்கு என விருது ஒரு முழுமையான கொண்டாட்டமாக நிகழ்கிறது.

விஷ்ணுபுரம் விருது மிகப்பெரிய வாசகர்குழுமம்- அல்லது நட்புக்கூட்டம் ஒன்றால் வழங்கப்படுவது. அதிலுள்ள அனைவருக்குமே விருதுகளின் நினைவுகள் இனியவை. விருது விழா என்பது ஒரு பெரிய கொண்டாட்டம். விழாவுக்குப் பின் உருவாகும் உணர்வெழுச்சி மேலும் பலநாட்கள் நீடிக்கும். டிசம்பர் தொடக்கம் முதலே அந்த எதிர்பார்ப்பும் உற்சாகமும் தொடங்கிவிடுகிறது.

இனியநினைவுகளுக்காக இப்பதிவுகளின் தொடுப்புகள். இவற்றினூடாகச் செல்லும்போது மெல்லிய ஒரு சாதனையுணர்வு எழுகிறது. கூடவே ஏக்கமும். எல்லா நண்பர்களும் புகைப்படங்களில் இளமையானவர்களாக தெரிகிறார்கள். நானும்தான்

விஷ்ணுபுரம் விழா 2022

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் முதல் விழா நினைவுகள்

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் அதிர்வுகள்

விஷ்ணுபுரம் விருது விழா – வரலாறு உருவாவது

விஷ்ணுபுர விழா நினைவுகள் வழியே

விஷ்ணுபுரம் விருது விழா, நினைவுகளில்…

விஷ்ணுபுரம் விருது விழா முழுப்பதிவுகள்

முந்தைய கட்டுரைமஞ்சேரி ஈச்வரன்
அடுத்த கட்டுரைவாழ்வெனும் சங்கீதம் – பழனி ஜோதி