தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீரபத்திரருக்கு சிறிய கோவில்கள் வழிபாட்டில் உள்ளன. வீரபத்திரர் தனி சன்னதியிலும், பரிவார தெய்வமாகவும் உள்ளார். பெருங்கோவில்களின் முக மண்டபத்தில் அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர் சிற்பங்கள் உள்ளன. மதுரையில் உள்ள அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர், காளி சிற்பத் தொகை சிவன் சன்னதியின் முகமண்டபத்தில் அமைந்துள்ளது.