அன்புள்ள ஆசிரியருக்கு,திரு யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டவுடன் அவருடைய நாவல்களில் முதலாவதாக பகடையாட்டத்தை படிக்கலாமெனத் தொடங்கினேன் (பகடையாட்டம் என்ற சொல் மிகவும் வசீகரமானதாக இருந்தது காரணமாக இருக்கலாம்).
மேஜர் க்ருஷ் மற்றும் அவரின் நண்பர் நானாவதியின் உரையாடல் வழியே நாவல் சொல்லவிருக்கும் ‘அதிகாரத்திற்கு பகடைக்காய்களாகும் சித்திரத்தையும்’ அது செல்லவிருக்கும் புதிய நிலமான ‘ஸோமிட்ஸியா’ வையும் குறிப்புணர்த்தித் தொடங்குகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஸோமிட்ஸியா என்னும் புதிய உலகத்திற்குள் பிரவேசிக்கிறோம். சிலபக்கங்கள் கடந்ததும் கொற்றவை நாடகள் நினைவுக்கு வந்தன. கொற்றவையில் வரும் முதல்பகுதி போலவே ஸோமிட்ஸியாவும் ‘வரலாறும் தொன்மங்களும்’ நிறைந்த ஒரு வியனுலகாக நம் கண்முன்னே விரியத்தொடங்குகிறது. ஸோமிட்ஸிய நிலம், மக்கள், மொழி,மொழியின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி நிலைகள், வாழ்வுமுறை என ஒவ்வொன்றாக சொல்லிச்செல்ல ஒரு கனவு போல நாமும் அதில் வாழத்தொடங்கிவிடுகிறோம். கொற்றைவையிலோ உணர்ச்சி மிகுந்து ஒரு வகை பித்து நிலையிலேயே நாவலின் கடைசிவரை செல்வதைத் தவிர்க்க இயலாது (நம் மூதாதையர் நம்மொழி என்பதும் ஒரு காரணமோ?). ஸோமிட்ஸியாவில் நாம் உலவத்தொடங்கினாலும் யுவன் அவருக்கே உரித்தான கூறுமுறையினால் ஒரு புன்முறுவல் மூலம் இடையிடையே நம்மை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்துவிடுகிறார்.
மேஜர் க்ருஷ் மற்றும் அவரின் நண்பர் நானாவதியின் உரையாடல் வழியே நாவல் சொல்லவிருக்கும் ‘அதிகாரத்திற்கு பகடைக்காய்களாகும் சித்திரத்தையும்’ அது செல்லவிருக்கும் புதிய நிலமான ‘ஸோமிட்ஸியா’ வையும் குறிப்புணர்த்தித் தொடங்குகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஸோமிட்ஸியா என்னும் புதிய உலகத்திற்குள் பிரவேசிக்கிறோம். சிலபக்கங்கள் கடந்ததும் கொற்றவை நாடகள் நினைவுக்கு வந்தன. கொற்றவையில் வரும் முதல்பகுதி போலவே ஸோமிட்ஸியாவும் ‘வரலாறும் தொன்மங்களும்’ நிறைந்த ஒரு வியனுலகாக நம் கண்முன்னே விரியத்தொடங்குகிறது.
ஸோமிட்ஸிய நிலம், மக்கள், மொழி,மொழியின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி நிலைகள், வாழ்வுமுறை என ஒவ்வொன்றாக சொல்லிச்செல்ல ஒரு கனவு போல நாமும் அதில் வாழத்தொடங்கிவிடுகிறோம். கொற்றைவையிலோ உணர்ச்சி மிகுந்து ஒரு வகை பித்து நிலையிலேயே நாவலின் கடைசிவரை செல்வதைத் தவிர்க்க இயலாது (நம் மூதாதையர் நம்மொழி என்பதும் ஒரு காரணமோ?). ஸோமிட்ஸியாவில் நாம் உலவத்தொடங்கினாலும் யுவன் அவருக்கே உரித்தான கூறுமுறையினால் ஒரு புன்முறுவல் மூலம் இடையிடையே நம்மை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்துவிடுகிறார்.
மன்னர் ஸோமிட்ஸு, அவருக்கு அடுத்த நிலையிலுள்ள ஈனோங், பிரபுக்களில் ஒருவரான வாங்யே, வாங் சுக் மற்றும் இல் சுங் போன்ற ஊழியர்கள்ஒற்றர்கள், அயலர்களான ஜூலியஸ் லுமும்பா, ஹான்ஸ் வெய்ஸ்முல்லர் மற்றும் பெண்கள் லேக்கி, நிரூபா என ஆட்டத்தின் சில காய்களின் கைகள் ஓங்கியும் சில காய்கள் வெட்டப்பட்டும் கதை விறுவிறுப்பாக செல்கிறது. இறுதியாக ஸோமிட்ஸிய எல்லைக்கருகில் இந்திய மண்ணில் ஆட்டத்தின் உச்சக்கட்டம் நிகழ்கிறது.
மன்னர் ஸோமிட்ஸு, அவருக்கு அடுத்த நிலையிலுள்ள ஈனோங், பிரபுக்களில்ஒருவரான வாங்யே, வாங் சுக் மற்றும் இல் சுங் போன்ற ஊழியர்கள்/ஒற்றர்கள், அயலர்களான ஜூலியஸ் லுமும்பா, ஹான்ஸ் வெய்ஸ்முல்லர் மற்றும் பெண்கள் லேக்கி, நிரூபா என ஆட்டத்தின் சில காய்களின் கைகள் ஓங்கியும் சில காய்கள் வெட்டப்பட்டும் கதை விறுவிறுப்பாக செல்கிறது. இறுதியாக ஸோமிட்ஸிய எல்லைக்கருகில் இந்திய மண்ணில் ஆட்டத்தின் உச்சக்கட்டம் நிகழ்கிறது.
இவருடைய கதை சொல்லல் முறை எனக்கு புதுமையாக இருந்தது. பல வெவ்வேறு கதைகளைக்கூறி கடைசியில் இணைத்து முழுச்சித்திரத்தையும் விளங்கிக்கொள்வது ஒரு புதிர் விளையாட்டு போன்று சுவாரசியமாக இருந்தது. சற்றே கவனக்குறைவாக இருந்தாலும் ஒன்றை வேறொன்றாக வெகுநேரம் எண்ணிக்கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக இமயமலை சார்ந்த கதைசொல்லலுக்குப் பிறகு ஒரு பழங்குடி வாழ்க்கையை தொடங்குகிறார். லயர் என்பது ஆப்பிரிக்க பகுதி எனத்தெரியாது போனதால் லுமும்பா ஒரு இமையமலைப் பழங்குடி என்றே நினைத்திருந்தேன் (இறுதிப்பகுதியில் ஆசிரியரே வெளிப்படையாகக் கூறும் வரை!).
எல்லாக்கதைகளையும் ஏறக்குறையச் சொல்லி, ஆனால் இன்னும் எதற்கும் விடை கிடைக்காமல் இருக்கும் தருணத்தில் திடீரென்று ‘சந்திரசேகரன்‘ என்று சம்பந்தமில்லாத பெயரில் கடைசி அத்யாயம் தொடங்கும் போது, என்ன இது என்று ஒரு கணம் தோன்றிற்று. உள்ளே செல்லச்செல்லத்தான் புரிந்தது அவர் அனைத்தையும் கட்டவிழ்க்க வந்த ஆசிரியர்தான் என்று (அடுத்ததாக படிக்கலாமென்று எடுத்த எண்கோண மனிதனின் முன்னுரையைப் படித்ததும் உறுதியாயிற்று; நல்லதொரு மருமகன் – அம்மாவன் இணை; தமிழ் வாசகர்களின் நல்லூழ்). இனியதொரு வாசிப்பு அனுபவத்தை அளித்த ஆசிரியருக்கு மீண்டும் நன்றி. விஷ்ணுபுரம் விருது
பெறும் அவருக்கு வாழ்த்துகள்.என்னைப்போன்ற ஆமை வேகத்தில் செல்லும் தொடக்ககால (சிலபல ஆண்டுகளாகவே!) வாசர்களுக்கும் வழிகாட்டி, எங்களின் வாசிப்புக் களத்தில் வெட்டப்படும எல்லாக் காய்களுமே ‘பகடையாட்டம்’ போன்றே (நம்முள் முளைக்கும்) நெற்றுக்காய்களாக அமையத்தரும் தங்களுக்கு அன்பும் வணக்கங்களும்.
விழாவை எதிர்நோக்கி,
இரா. செந்தில்.