குடிமைப்பண்பு, கடிதம்

இனக்குழுப் பண்பில் இருந்து குடிமைப் பண்புக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு,

குடிமைப் பண்பு கட்டுரை சில நினைவுகளை  ஞயாபகப்படுத்தியதால்  இக் கடிதம்.  

வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கொரோனா காலகட்டத்தில் இரண்டு வருடம் சென்னையில் (வாழ) இருக்க நேரிட்டதுஏற்கனவே பழகிய இடமாக இருந்தாலும் பொது இடங்களில் இருக்கும் வித்தியாசம் கண்ணில் படும்தெரு சந்திப்பில் எரியும் குப்பை, அருகில் மேயும் மாடுகள்ஆங்காங்கே வழிந்தோடும்  கழிவுநீர்ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள்புகார் அளிப்பது சமூக வலைதளங்களில் பதிவிடுவது  பகுதி நேர வேலையாகிப் போனது. ஆங்காங்கே சிலர் இது போன்ற பொது பிரச்சனைகளை பற்றி புகார் அளிக்கின்றனர்இந்தியா முழுமையும் உள்ள பிரச்சனைடைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னை பதிப்பில் மீண்டும் மீண்டும் பொது பிரச்சனைகள் காற்று மற்றும் நீர் நிலைகள்  மாசு பற்றிய செய்திகள் வரும்ஒன்றும் பெரிய மாற்றமில்லைநமது மக்கள் அனைத்தையும் கடந்து போகும் வலிமை பெற்றிருக்கிறார்கள்.  

வீடுஎத்தனையோ முறை பார்த்த திரைப்படம் தான். ஆனால் சமீபத்தில் மறுபடியும் பார்க்க சில காட்சிகள் கவனிக்க நேர்ந்தது. அதில் ஒரு இடத்தில் நாயகி நாயகனுடன் இரண்டு நிமிடம் ஆற்காடு சாலையில் நடந்து செல்வது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.  39.00 முதல் 41.00 வினாடி வரை. உபயோகப்படுத்த முடியாத நடைபாதைகள், நடைபாதையில் கடைகள், கட்சி கொடி கம்பங்கள், தடுப்புகள், மழை நீரோடும் முக்கிய சந்திப்புகள், எந்த வரைமுறையும் இல்லாமல் செல்லும் வாகனங்கள்குப்பையை மேய்ந்து கொண்டு இரண்டு மாடுகள்  இருக்கும்

35 ஆண்டுகள் முன்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது (ஒரு வரலாற்று தொடர்பு வந்து விடுகிறது) என்று இருப்பதா அல்லது 35 ஆண்டுகள் கடந்தும் இப்படியே இருக்கிறது என்று வருத்தப்படுவதா ?

பிரவீன்

அன்புள்ள பிரவீன்,

உண்மையில் 35 ஆண்டுகளுக்குப் பின் குப்பைகள், சூழல் சீர்கேடு பலமடங்கு கூடிவிட்டது. பல காரணங்கள்.

ஒன்று, ‘சாஷேஎன்னும் சிற்றுறை வணிகம். இவை திரும்ப சேகரிக்க முடியாதவை. இந்தியா போன்ற நாட்டில் இவை அனுமதிக்கப்படவே கூடாது. பாலிதீன் உறைகள் மிகப்பெரிய சுமை. இன்று நம் நிலத்தை பாழ்படுத்துபவை முதன்மையாக இவைதான். சிறு சிறு மலைக்கிராமங்களில்கூட இக்குப்பைகள் மலையெனக் குவிகின்றன.

இன்று இக்குப்பைகளை அகற்ற, மறுசுழற்சி செய்ய எந்த அமைப்பும் நமக்கு இல்லை. அதற்கான முதலீடு ஒரு பைசாகூட இல்லை. இதை பலமுறை எழுதியுள்ளேன். குப்பைகளை அள்ளி சாலையில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசென்று குவிப்பது மட்டுமே நிகழ்கிறது. கிராமங்களில் நீர்நிலைகளில் கொண்டுசென்று கொட்டுகிறார்கள்.

குப்பைகளை வீசுவதில் அடிப்படை குடிமைப்பயிற்சியே நம்மிடமில்லை. படித்தவர்கள்கூட குப்பைகளை நின்ற இடத்திலேயே கசக்கி வீசுவதைக் காணலாம். நுகர்வு பெருகுதல் குப்பைகளை பெருக்கும். அவற்றை கையாள அரசுக்கும் மக்களுக்கும் தெரியவில்லை. ஆகவே மொத்த இந்தியாவும் ஒரு மாபெரும் குப்பைக்கூடையாகி மக்கள் அதற்குள் வாழ்கிறார்கள்

ஜெ 

முந்தைய கட்டுரைஇந்து மெய்ஞானம் என்னும் சொல்
அடுத்த கட்டுரைகுருகு டிசம்பர் இதழ்