அடியடைவு, கடிதம்

அடியடைவு

 

அன்புள்ள ஜெயமோகன்  

உங்கள் அடியடைவு கட்டுரை உங்கள் தளத்தில் படித்த போது என் மனம் மேலும்கீழுமாய் அலைபாய்ந்தது.  காரணம் அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்த அனுபவங்களை என் அனுபவங்களுடனும் தேடல்களுடனும் ஒப்பிட்டதாலும் எனக்குள் இருந்த சில குழப்பங்கள் விளைந்த தெளிவுகள் என்பதுகுறித்தும்தான்…  இதற்கெல்லாம் அடிப்படை பின்புலம், நம் பண்பாடு நம் இந்துமதம் நம் ஒழுக்கம் என நம் வழிமுறைகளை (குறிப்பாக, மத சடங்குகளை) பின்பற்றுவதிலும் அதனாலேயே எனக்குள் எழுந்த மன குழப்பங்கள்தெளிவுகள் ஆகியவையேஇதைப்பற்றி கொஞ்சம் எழுதுகிறேன்.

நான் அறத்துடன் வாழ்ந்த ஒரு அரசு ஊழியரின் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவன்என் பெற்றோர் நாங்கள் நல்லபடியாக வளர பாடுபட்டவர்கள்.  அந்த காலத்திலிருந்து நான் கேட்ட ஒரே அறிவுரைநல்லா படி. நல்ல வேலை பார். நாலுபேர் மெச்சும்படி இருஎன்பது மட்டுமேநாங்கள் எல்லோருமே நன்றாகத்தான் படித்தோம்சின்ன வயதிலிருந்தே அப்பா பல ஆண்டுகளாக வெளியூரில் வேலை விஷயமாக இருந்ததால் என் அம்மாவுக்கு வீட்டு வெளி வேலைகளுக்கு நாங்கள் தான் துணைகுறிப்பாக கோவிலுக்கு செல்ல நான்தான் துணை; அதனால் அடிக்கடி கோவிலுக்கு போகும் பழக்கமும் அமைந்தது.  என் தாய்மாமாவுக்கு என்னை நிறைய பிடிக்கும்; என் படிப்பை பாராட்டுவார். எங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் ஓட்டலுக்கு கூட்டிச்சென்று ஒரு ரோஸ்ட் வாங்கிக்கொடுப்பார். அதனாலேயே எனக்கும் அவரைப்பிடிக்கும்.

 பள்ளிக்கூடம் படித்த நாட்களில் அவர் என்னிடம் ஒரு கந்தர் சஷ்டி கவசம்  கையகல புத்தகத்தை கொடுத்துநான் சொலுறதை கேள்தினமும் இதை படி. நல்லா மார்க் வாங்குவேஎன்றார்அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட என் கல்லூரி முடிக்கும்வரை தினமும் பாராயணம் செய்தேன்நாலு பேர் மெச்சும்படித்தான் என் படிப்பும் இருந்ததுகாரண காரியங்களை  பகுத்தறிய தெரியாத மனதுஎன் படிப்பு பாராயணத்தினால்தான் என்று எளிதாக காரணித்துக்கொண்டேன்.  எதோ பெரியதாக ஒன்றை அறிந்துகொள்வதற்கு இது வழி என்றும் நினைத்துக்கொண்டேன்ஆனால், கவசம் தமிழிலேயே இருந்து புரியவும் புரிந்ததால் ஒரு நிரடல் இருந்துகொண்டே இருந்தது: நான் பாராயணம் செய்வது, “முருகா, என்னை, என் உடம்பை உயிரை மனதை காப்பாற்று; என்னை இரவிலும் பகலிலும், வீட்டிலும் வெளியிலும் காப்பாற்று; மனிதர்களிடமிருந்தும், மிருகங்களிடமிருந்தும், மற்றவைகளிடமிருந்தும் காப்பாற்றுஎன்பதுதான் என்றுஒரு பக்கம் இதற்கும் படிப்புக்குமோ அல்லது நான் கற்பனை செய்திருந்த இன்னும் புரியாத விஷயத்திற்குமோ என்ன சம்பந்தம் என்ற கேள்வியை என்னால் புறந்தள்ளமுடியவில்லை.  எப்படி இருப்பினும், மேல்படிப்புக்கு வெளிநாடு சென்றபின் கந்தர் சஷ்டி கவசம் மெதுவாக மறைந்துவிட்டது.   

பல வருடங்களுக்குபிறகு மறுபடி சில பாராயணங்களும் சடங்குகளும் வாழ்க்கையில் வந்து புகுந்ததுஇந்தமுறை என் திருமனத்திற்கப்புரம்பலவருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த காலத்தில் நாங்கள் மதிக்கும் ஒரு மூத்த பெண்மணி எங்களை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய சொல்லி ஓரிரு மாதங்கள் எங்களை அவர் வீட்டிற்கு வரச்சொல்லி கற்றும் கொடுத்தார்அதை தினமும் பாராயணம் செய்தேன்.  அந்த ஒரிரு வருடங்கள் எங்கள் வாழக்கையிலும் நிறைய மாற்றங்கள், மற்றும் நல்ல செய்தியும்.  இட மற்றும் பார்வை மாற்றங்களினால் இருக்கலாம்; பாராயணத்தின் விளைவாக இருக்கலாம்; அல்லது காக்கை உக்கார பனம்பழமாகக்கூட இருக்கலாம்ஆனால் மனதென்று ஒன்று இருக்கிறதே, அது காரணத்தையும் காரியத்தையும் முடிச்சு போட்டுவிட்டது

கிட்டத்தட்ட அடுத்த பதினைந்து வருடங்கள் முழுமூச்சுடன் தொடர்ந்த பாராயண பழக்கத்துடன், கோவில் பயணங்களும் பல மத சடங்குகளும் சேர்ந்துகொண்டனஎன் உணவிலும் சைவமாக ஆகிவிட்டேன். என் வீட்டார் உறவினர் பார்வையில் நான் ஒரு பக்திப்பழம்; அடுத்த சந்ததியினருக்கு நான் ஒரு முன்மாதிரி!  இதற்கெல்லாம் தாண்டி உள்ளுக்குள் நான் கற்பனை செய்துகொண்டே இருந்த விஷயம் குழப்பமாகவே இருந்ததுமொத்த ஸஹஸ்ரநாமமும் பெருமாளின் அழகு, முழுமை, வீரம், கருணை போன்ற கல்யாண குணங்களை முன்வைத்தே என்று தோன்றியது.. அது முடிவதும் என்னை காப்பாற்று, நான் வேண்டுவனவற்றை தா என்ற பிரார்தனைகளுடன்தான்வேண்டுவன இவ்வுலகில் இவ்வாழ்க்கையில்தான் இருக்கவேன்டும் என்பதல்ல என்றாலும், இத்தனை பக்தியும் பாராயணமும் ஒரு சராசரி மானுட வேண்டுதலுக்காக மட்டும்தானா என்ற ஒரு முள் உறுத்திக்கொண்டே இருந்ததுஆனாலும் பாராயணத்தை விடவில்லை; கூடவே ஒரு மாற்றமும் நிகழ்ந்துகொண்டேஇருந்தது..

 தற்செயலாகவோ அல்லது பல வருடங்களில் ஏற்பட்ட அறிமுகங்களினாலேயோ கொஞ்சம் கொஞ்சமாக நான் கூட கற்றுக்கொண்ட லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, தேவீ உபநிடதம் என்ற சாக்த பாராயணங்கள் என்னை வெகுவாக கவர்ந்தன ஆக்கிரமித்துகொண்டன.  கொஞ்சம் கொஞ்சமாக பொருளுணர்ந்து இவற்றை படிக்க பாராயணம் செய்ய கற்றுக்கொண்டேன்எனக்கு புரிந்தவரை ஒன்றை கண்டேன்: இந்தவகைப்பட்ட தொல்பாடல்கள் எல்லாமே ஒரு மாபெரும் இயற்கை சக்தியின் எல்லா நாமரூபங்களையும், செயல்களையும், வெளிப்பாடுகளையும், வேறு பல பரிணாமங்களையும் கொண்டாடுவது மட்டுமே என்று தோன்றியதுஆதனாலேயே இதில் அவள் நம் அறிவுக்கு நல்லவையாகவும் (அழகு, அறிவு, பெருமை, வல்லமை, செயலூக்கம், கட்டமைப்பு,..) நல்லவையல்லாதவையாகவும் (காமம், கோபம், மயக்கம், மீறல்,..), காட்டப்படுகிறாள்வேண்டுவதை கொடுப்பவளாகவும் அதையும் கடக்க அருள்பவளாகவும், தெரிந்தவை அனைத்தாகவும் அவற்றிக்கப்பாலும், ஒரு தனி மனிதனின், ஒரு கூட்டத்தின், ஒரு மொத்தமான உயிரெழுச்சியின் அத்தனை பரிணாமங்களாகவும் என பல தளங்களில் அவளைப்பற்றிய வர்ணனைகள் விரிகின்றன.

விதி சமைப்பவளும், சமைத்த விதியை மீறுபவளும், மீறலை தண்டிப்பவளும், சரணடைந்தவர்களுக்கு அருள்பவளும் என்று ஒன்றுடன் ஒன்று பின்னிப்பின்னி அவளது லீலைகள் ஊடாடுகின்றனஇந்த உலகமே அவளது எலிபூனை விளையாடகவே தெரிகிறதுஇந்த சாக்த நூல்களின் சாரமே இவள் இப்படித்தான் என்று சுட்டுவது மட்டுமே என்றும், அதனால், படிப்பவரிடமும் கேட்பவரிடமும் இந்த உலகத்தைப்பற்றியும் தன்னைப்பற்றியும் ஒரு அகம் சார்ந்த பார்வையை உருவாக்குவது மட்டுமே என்று தோன்றியதுஅந்த ஒரு தெளிவு ஏற்பட்டபின் இந்நூல்களை பாராயணம் செய்வது ஒரு சடங்காக இல்லாமல், ஒரு பார்வையாக, ஒரு இயற்கை வழிபாடகவே மட்டுமே என்றும், என்னை காப்பாற்று என்றோ எனக்கு வேண்டுவன கொடு என்றோ கேட்பதற்காக இல்லை என்றும் புரிந்ததுஇப்போது பல வருடங்களாக இந்நூல்களை மட்டுமே பாராயணம் செய்கிறேன்

இந்த தளத்தில் இப்படியென்றால், வேறொரு விதத்தில் மற்றொரு கேள்வி வந்து சேர்ந்தது..  எனக்கு பல வருடங்களாகவே பெரியார் கருத்துக்களில் ஒரு மாபெரும் பற்றும் ஈடுபாடும் உண்டுஅவரால்தான் அவரது அரும்பாடுபடல்களால்தான் என் குடும்பத்திற்கு படிப்பும் விழிப்புணர்வும் வேலையும் கிடைத்தது என்றால் அது உண்மைதான்மத சடங்குகள் எல்லாமே மூட நம்பிக்கை மட்டுமே; சக மனிதனை அடக்கும் ஒரு கருவியே என்ற பெரியார் பார்வையில், என் குலமக்களை அழுத்திய ஒரு கலாச்சாரத்திற்கு துணை போகிறோமோ என்ற ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்ததுஇதற்கு மேலும், கடந்த ஆறேழு வருடங்களாக என் கார்ப்பரேட் வேலையெல்லாம் உதறிவிட்டு ஒரு கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருக்கிறேன்.

இந்த வேலை ஒரு சேவையாக ஒரு புதிய மனத்திறப்பாக எனக்கு அமைந்தது.  JK –யின் பார்வை (என்னுடைய புரிதலில்) கிட்டத்தட்ட நமது வேதாந்த சிந்தனைதான்; ஆனால் மேற்கத்திய சிந்தனை உடையவர்களுக்காக அதன் சாரம் அந்த சொல் பொருள் வழக்கில் தொகுக்கப்பட்டதுஅவர், நம் பின்புலங்களும் நாம் உண்மையென்று நம்பும் கோட்பாடுகளும் எப்படி நம் பார்வையையும் செயல்களையும் மாற்றுகிறது என்றும், அதனால் வெளிப்படும் தான்சார்ந்தவாழ்க்கையையும் சுட்டிக்கட்டுவாரே தவிர, இதுதான் சரி இதுதான் தவறு என்று எதையுமே சுட்டமாட்டார்ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கணத்திலும் மனதின் அறிவின் பாதை பற்றி விழிப்புடன் இருப்பது மட்டுமே அவர் காட்டும் ஒரே வழி.   அவரது மதம் சார்ந்த பார்வையும் வெகு பிரசித்தம்: கண்மூடித்தனமாக மனிதன் தொடரும் எந்த ஒரு மதமும் அவனை விழிப்புக்கு கொண்டு செல்லாது என்பதும், எல்லா மத சடங்கும் தேவையற்றது மட்டுமல்ல மூடபழக்கவழக்கம் மட்டுமே என்பதும்இந்த சில வருடங்களில் பலமுறை நான் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி இது: நீ பெரியாரை கொண்டாடிக்கொண்டே JK பாதையிலும் இருந்துகொண்டே, எப்படி தினமும் ஸஹஸ்ரநாமமும் படிக்கிறாய்?  என் பாராயணங்களை ஒரு அகப்பார்வைக்காக மட்டுமே செய்கிறேன் என்று நான் சொல்லும் பதில் பலருக்கு ஏற்புடையதாக இல்லை என்று தெரிந்தாலும் வேறு பதில் என்னிடம் இல்லை

உங்கள் அடியடைவு கட்டுரை படித்தபோது எங்களுடைய கயை பயணத்தை திரும்பிபார்ப்பதைப்போலவே போலவே உணர்ந்தேன்…  சில வாரங்களுக்கு முன்னால் என் தந்தையின் நீத்தார் கடனுக்காக கயை சென்றிருந்தோம்இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்தோம்உங்களுடைய கட்டுரையில் படித்தது போலவே என் குடும்பத்தாருக்கு நீத்தார் கடன் நடத்திய அனுபவம் கிடைத்ததுமுதலில் அந்த விஷ்ணுபாத் கோவில் பல்குன ஆற்றின் படித்துறையில்; கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதிலுமிருந்து; அனைவரும் தங்கள் முன்னோர்களுக்காக குழுமியிருந்தார்கள்எங்களுக்கு நீத்தார் கடன் செய்துவைத்த வேதியர் 32 பிண்டங்கள் செய்யச்சொன்னார்..  முதலில் என் தந்தை, அவரது தாய் –தந்தை, அவர்களது தாய்தந்தையர்கள் என்று ஆரம்பித்து, என் தந்தைவழி, தாய்வழி, மனைவிவழி மூதாதையர்கள், சகோதர சகோதரிகள், சந்ததியினார்கள், உறவினர்கள், நண்பர்கள் என விரிந்து, பின்னர் எங்களுக்கு உறவாயோ பிறவாயோ இப்போதோ எப்போதோ அறிந்தோ அறியாமலோ வாழ்ந்து மறைந்த உயிர்கள் என்று அனைத்தையும் சேர்த்துக்கொண்டபோது, என்னை அறியாமல் எனக்கு ஒரு சிலிர்ப்பு

கயையில் ஒவ்வொரு உயிர் வழியாகவும் எல்லா உயிர்களுக்குமான ஒரு தொடர்நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கிறதுஇந்த சடங்கில்தான் என்ன ஒரு பரந்த மனப்பான்மைஇந்த உயிர்க்குலம் அனைத்தும் தன் உறவென்று உணர்தலும், வாழ்ந்து முடிந்த அத்தனை உயிர்களுக்கும் தொடர்ச்சியாகவே நாம் ஒரு விளிம்பில் நிற்கிறோம் என உணர்த்துவித்தலும்தான் இந்த சடங்கின் சாரம் என்று உணர்ந்தேன்உண்மையில், இது தனக்கே இவ்வுலகத்தை பற்றி இவ்வுயிரொழுக்கை பற்றி ஒரு அகப்பார்வையை உருவகிக்கும் ஒரு செயல் மட்டுமே என்றும், இச்சடங்கிலும் சடங்கைவிட சடங்கைச்செய்யும் ஒருவரின் மனநிலை மட்டுமே முக்கியம் என்றும், அந்த மனநிலை அவரது அகத்திறப்புக்கு கொண்டுவிடும் என்றும் தோன்றியது.

என்னுடைய பாராயணத்துடன் உடனே ஒப்பிட முடிந்தது…  பாராயணமும் நீத்தார் கடனும் ஒரேவகையான சடங்கு சேர்ந்தவையே என்று தோன்றியதுவெளிப்பார்வைக்கு இரண்டும் சடங்குகள் மட்டுமேஅதிலும் இவற்றை ஒரு மத சடங்குகளாக பார்த்தால் இரண்டுமே சடங்குகள்தான்; இந்த சடங்கு சுட்டும் அகப்பார்வையுடன் பங்கேறக்கும்போது, அந்த மனநிலையே ஒரு மனத்திறப்புக்கு வழி செய்யும் என்று புரிகிறது.  “கல்லைககண்டால் நாயைக்காணோம்; நாயைக்கண்டால் கல்லைக்காணோம்கதைதான்கடைசியில் இரண்டுமே ஒருவர் மனத்தில் நிகழ்பவை மட்டுமே. உங்களதுஇச்சடங்கு எனக்காக.” என்று முடியும் வாக்கியமே இந்த மனத்திறப்புக்கு துணையாக நின்றது.

இந்த பயணத்தில் இன்னுமொரு அனுபவமும்: 32 பிண்டங்களையும் நீத்தருக்காக கொடுத்தபின் அவற்றை  எடுத்துச்சென்று விஷ்ணுபாத கோவிலில் சமர்பிக்கவேண்டும் என்றார்கள்சென்றோம்அக்கோவிலின் நடுவே அகன்ற மண்டபத்தில் தரையோடு தரையாக ஒரு பெரிய பாறைஅதில் விஷ்ணுவின் காலடி என்று நம்பப்படும் ஒரு காலடித்தடம்இந்த பாறையைச்சுற்றி வெள்ளியினால் பாத்தி அமைக்கப்பட்டு அருகில் அமர்ந்து அதன்மேல்தான் பிண்ட சமர்ப்பணம்எல்லா பூஜைகளும் வழிபாடுகளும் பாறைக்கும் அந்த காலடிக்கும்தான்அந்த பாறையில் பால் ஊற்றும்போது அது ஒரு குமரியின் பாதமாகத்தான் தெரிகிறது

அந்த பாறையையும் காலடியையும் பார்த்தபோடு உங்கள் கொற்றவைதான் என்று எனக்குள் தோன்றியதுநீத்தார் பிண்டங்களை அவளுக்கு சமற்பிப்பதும் சரியேஉங்கள் அடியடைவு கட்டுரையை படித்தபோது என்னுடைய இந்த அனுபவங்களையும் காலடியையும்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது.  அடியடைவு என்ற சொல்லே பொருத்தமாகத்தான் இருக்கிறதுஎழுதிவிட்டேன்

வணக்கங்கள்

குமரன்

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க 

ஒளிரும் பாதை வாங்க 

தன்னைக் கடத்தல் வாங்க

முந்தைய கட்டுரைமருபூமி வெளியீட்டு விழா உரைகள்
அடுத்த கட்டுரைநம்பிக்கையின் சொற்கள், கடிதம்