ஞானத்தின் படித்துறை – கடிதம்

அன்பு ஜெ.,

எரிந்தமைதல் படித்தேன். உங்கள் பயண குறிப்புகளில் இப்படி ஒரு உக்கிரத்தை பார்த்ததில்லை. ஒரு உன்மத்தம் போல இருக்கிறது. என்னுள் எதையோ புரட்டி போடுகிறது. ஒரு நில காட்சியைபோல மிகவும் சாதாரணமாக சொல்வது போல சொல்லிதான் செல்கிறீர்கள்ஆனால் அதனில் இருக்கும் தீவிரம்  என்னை உலுக்கிக் கொண்டு இருக்கிறது.

எங்கள் குடும்பங்களில் எரிக்கும் வழக்கம் இல்லை, புதைப்பது தான். அப்பா உட்பட பல மரணங்களை குழிக்குள் மிக அருகில் நின்று பார்த்து இருக்கிறேன். அப்பாவின்  உடலை மண்ணால் மூடிக்கொண்டு இருக்கும் பொழுது கடைசியாக மிச்சம் இருந்தவாட்ச் கட்டிய கை  ஞாபகத்தில் அப்படியே தங்கி இருக்கிறது.  சுனாமியின் முதல் நாள் மாலைகடலூரில் குப்பை சருகுகள் போல உடல்களை லாரிகளில் கொட்டி கொண்டு சென்ற காட்சிகள் கொடுத்த திடுக்கிடல் ஒரு உச்சம்.

எரிக்கும் போது உடல் திடீர் என்று எழுந்து உட்காரும்அது எவனாவது பார்த்தா அவ்வளவுதான்‘, ‘மண்டை ஒடுக்குள்ள காத்து போய்…’ என்று ஊளை வரும்…’

சிறு வயசில் இருந்து இப்படியெல்லாம் கேள்வி பட்டதனால் எரியும் சிதைகளின் மேல் ஒரு பயம் எண்ணில் குடிகொண்டு விட்டது. கடந்த வருடம் என் எதிர் வீட்டு நண்பனின் அம்மாவின் இறுதி கடன்களின் போது உடன் இருந்தேன். சிதையில் ஏற்றி கொல்லி வைத்த பிறகுஉலர் தேங்காய்களை  அடுக்கி நெய் ஊற்றிக் கொண்டே இருந்த மயான பெண் ஊழியர்இனி நீங்க போகலாம் தம்பி! நாங்க பார்த்துக்குறோம்என்று துரத்தி விட்டார்கள். இருந்தும், அந்த பயம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

உங்களின் இந்த குறிப்பை பார்த்த பிறகு இனி எந்த சிதையயும் எந்த தயக்கமும் இன்றி பார்ப்பேன் என்று தோன்றுகிறது. ஏன் இந்த உடலை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியது? நீங்கள் எடுத்தது தானா? பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டுவாசகர்களுக்கு உறுத்தாத, மனம் நோகாத புகைப்படங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கற்பிக்க பட்ட எனக்குஇந்த படங்கள் நடுங்க வைத்தன. அது பயத்தினால் அல்லவேற ஏதோ. வாழ்க்கையின் ஆதி உண்மையின் ஒரு துமியை பார்த்த அதிர்ச்சியாகவும் இருக்கலாம்

ராஜு

இந்து மெய்மை வாங்க 

 

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்

அன்புள்ள ஜெ,

தங்களின் அடியடைவு கட்டுரையை எனக்கு நெருக்கமாக உணர்தேன், என் தந்தையின் ஈம  எழுவருடம் முன் என் தாயுடன் சென்று முடித்தேன், உண்மையில் நானும் எடையின்மையை உணர்தேன் (subjective to the  core )

நீங்கள் விக்னேஷ் அவர்களுக்கு எழுதிய கடிதத்திடல் குறிப்பிட்டதை போல அந்த கள்ளமின்மைக்கும், தர்க்கத்திற்கும்  ஒரு ஊசல் ஆடிக்கொண்டேயிருக்கிறது

நீங்கள் – காசி-நான்-நான் கடவுள் ஒரு இழை, நான் தங்களை அறிந்துகொண்டது, வாசிக்க தொடங்கியது அந்த திரைபடத்தின் வழியாகவே, அதிலிருந்து தான் இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் வழியாகவே தத்துவ (மாணவனாக) அறிமுகம் கிடைத்தது . காசியின் படித்துறை, கால பைரவர், காலமின்மையை உணரச்செய்பவை.

காசி காலத்தின் தலைவனின் ஆலயம் ஆகையால், அவன் கூறுவான், “என்னைமுன் நில்லமின் தெவ்வீர் பலரென்னை” என்று ..! காலனை உதைத்த நாயகன் முன் அனைவரும் “spec of dust”

எவ்வகையிலும் இந்த கட்டுரையே எனக்கு ஆக சிறந்தது.

ராம் பாலாஜி

முந்தைய கட்டுரைசங்க இலக்கியம், உரை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபோதை வரலாறு, கடிதம்