விஷ்ணுபுரம் விருது விழா 2023 : தங்குமிடம் பதிவு

Vishnupuram Ilakkiya Vattam

அன்புள்ள நண்பர்களுக்கு,

இவ்வருட விஷ்ணுபுரம் விழா டிசம்பர் 16, 17 தேதிகளில் ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  இரண்டு நாட்களும் விழாவில் விவாத அரங்குகளில் பங்குபெற விரும்பும் நண்பர்களுக்கான தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரங்குகளில் பங்குபெறவிரும்பும் நண்பர்களில் இரவு தங்குமிடம் தேவைப்படுபவர்கள் மட்டும் இந்த படிவத்தை நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். (வெளியிடங்களில் தங்கி அரங்குகளில் விழாவில் பங்கெடுக்க விரும்பும் நண்பர்கள் தயவு செய்து படிவத்தை நிரப்ப வேண்டாம்.)

விழா நாட்களில் 16ம் தேதி காலை 6.00 மணி முதல் 17 ஆம் தேதியும், மறுநாள் 18ம் தேதி காலை 6.00 மணி வரை மட்டுமே தங்குமிடம் ஒருக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் வருகையை அந்த நேரத்திற்குள் அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பதிவு செய்தவர்களுக்கான மின்னஞ்சல் டிசம்பர் 10ம் தேதிக்குள் அனுப்பப்படும். பதிவு செய்த அனைவருக்குமே இடம் இருக்கும் என்பதால் பதற்றம் தேவையில்லை.

இந்தப் படிவத்தை வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன் பின் இப்படிவம் செயல்படாது.

தயவு செய்து படிவத்தை ஆங்கிலத்தில் நிரப்பவும். ஒரு படிவத்தில் ஒருவருக்கான தங்குமிடம் மட்டுமே பதிவு செய்ய இயலும். ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்கள் இணைந்து வருவதானாலும் படிவம் தனித்தனியாகவே பதிவு செய்யப்பட வேண்டும். பெண்களுக்கு தனி தங்குமிடங்கள் ஒதுக்கப்படும்.

(தங்குமிடம் நிரப்புவதில் சிரமம் இருப்பின் 98843 77787 திரு.ஸ்ரீனிவாசன், 98405 94965 திருமதி.சுதா ஸ்ரீனிவாசன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.)

விஷ்ணுபுரம் விழா தங்குமிட படிவம்

நன்றி

விழாக் குழுவினர்

முந்தைய கட்டுரைநற்றுணை, கீரனூர் ஜாகீர்ராஜா அரங்கு
அடுத்த கட்டுரைநாலாயிர திவ்யப் பிரபந்த வகுப்புகள் அறிவிப்பு