சாம்ராஜ் படைப்புகள், கடிதம்

சாம்ராஜ் நாவல் கொடைமடம் வெளியீடு. கவிக்கோ அரங்கம். சென்னை. 2 டிசம்பர் 25, 2023, கவிக்கோ அரங்கம் சென்னை

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் திரு.சாம்ராஜ் லண்டன் வந்திருந்த போது , நமது விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர் திரு.லண்டன் ராஜேஷுடன் சென்று நேரில்  சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன்.

ஒரு எழுத்தாளரை (அதுவும் இயல் விருது வாங்கிய ) நான் நேரில் சந்திப்பது அதுவே  முதல் முறை. ஆகவே ஒரு பரவசத்துடனும்.. என்ன பேசப்போகிறோம் என்ற குழப்பத்துடனும் இருந்தேன். நல்ல வேளையாக அவரை சந்திக்கும் முன்பு அவரின் என்று தானே சொன்னார்கள் வாசித்துவிட்டு சென்றேன். அது எனக்கு அவரை அறிய தொடக்கப்புள்ளியாக இருந்தது. ‘சகல திசைகளிலும் நிற்கும் சூலம்‘, ‘அவள் நைட்டி அணிந்ததில்லை ‘ , ‘தோழர் தயாளன்‘ , காணாமல் போனவர்களைப் பற்றிய சுவரொட்டிகள் முதலிய கவிதைகளின் மீதான எனது வாசிப்பனுபவத்தை அவரிடம் சிற்றுண்டி சாலையில் பேசிக்கொண்டிருக்கும் போது மெல்ல முன்வைத்தேன் . நான் ஒரு தொடக்க நிலை வாசகன் என்பதையும் சொல்லி. ஆனால் அவர் என்னிடம் மிக விரிவாக பேசினார். ‘வாசகனில் என்ன தொடக்க நிலை முடிவு நிலை?’ என்று அவருக்கே உரிய பாணியில் பகடியுடன் என்னின் தயக்கத்தை தடைகளைப் போக்கினார்.

அன்று ஒரு நாள் முழுவதும் அவருடன் இருந்தது , உரையாடியது எனக்கு மறக்க முடியாத ஒரு பெருநிகழ்வு. அதோடு அவர் தனது கையெழுத்திட்டு தந்த அவரின் புத்தகங்கள். மறுக்க முடியா பொக்கிஷங்கள் அவை.

குறிப்பாக  ‘பட்டாளத்து வீடுமற்றும்ஜார் ஒழிகதொகுப்புகளை வாசித்தேன்.

அவை என்னை நிற்க வைத்தது, நின்று யோசிக்க வைத்தது , அகத்தாய்வு செய்ய வைத்தது, எச்சரிக்கை மணி ஒலித்தது,  இவை எல்லாவற்றுடனும் மறக்காமல் என்னை சிரிக்கவும்  வைத்தது அக்கதைகள்.

மதுரை மண்ணின் மணத்திலும்கேரளக் குழுமையிலும்,  திருச்சியின் வெம்மையிலும், சென்னையின் பரிணாமக்  கப்பலிலும், சன்னதத்துடன் கூடிய  கொடியேற்ற நிகழ்விலும், இயற்கையின் விளைவுகளாலும்  கடந்த சில நாட்களாக உழன்றேன்.  

என்னை பாதித்து நிற்க வைத்தவை  எது எனக் கேட்டால் .. உடனே சொல்வேன் அனைத்துக் கதைகளும் என்று.

ஆனால் என்னை நெருங்கி வந்து ஏதோ செய்து ஆட்கொண்டவை கீழ் கண்ட கதைகள்:

நாயீஸ்வரன்

எல்லா இடத்திலும் பணம் தெரிந்தது ..கதவின் இடுக்கில் வழி எதிர்சாரி இட்லிக்கடை பாட்டி தெரிந்தாள்ஈஸ்வரனோடு அந்த பெண் பறவையையும்அவர்கள் இருவர்என நீங்கள் அழைத்ததாலேயே ..காலம் தவறி துயருடன் ஆண்  பறவை பாடினாலும் ..எனக்குள் ஏதோ ஒளிக்கீற்று தென்பட்டது.

கைலாசபுரம்

அமைப்பு எனும்பொழுது நிறைய எண்ணிக்கையில் யோசிக்க வேண்டியதில்லை .கூடிப்போனால் நூறு பேர்“-

இன்றைய இலக்கிய கூட்டங்கள் தான் என் அனுபவத்தில் ஞாபகம் வந்தது.

மாயன் சண்டியர் தான் ஆனால் பெரிய சண்டியர்கள் வந்தால் பவ்யமாக அவர்கள் பின்னால் போய் நின்று கொள்வான் ” – தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒரு சிறந்த குறியீடு இது.

அறை என்பது தோழர் ஒருவரின் காம்பவுண்டில் ஒரு வீடு. வீடென்பது பத்துக்கு பத்து அறை

முன் அறிவிப்பு செய்து , அடித்தும் விட்டு அருகிருந்து சிகிச்சை அளிக்கும் தோழர்களுக்கும் மல்லிகாவை நிமிண்டி ஆப்பிள் கொடுக்க சொன்ன மாயனுக்கும் ஒரு ரெட் சல்யூட்.

பார்வதிக்குட்டி

கார் டிக்கியை விட இது பெருசுதான்என மகன் சொல்லக் கேட்ட பார்வதிக்குட்டியாய் சில மணி நேரங்கள் அதிர்ந்து இருந்தேன்.

அனந்தசயனபுரி

இதுவரை திருவனந்தபுரம் சென்றது இல்லை. கட்டாயம் செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டது இதை வாசித்தபின்.இதன் அழகியலை ரசித்தேன்.

ஒரு கைவிடப்பட்ட வீட்டில் இருந்து பூனை ஒன்று மழையைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு நீள் மௌனம் போல தெரு கிடந்தது‘.

வயசாளி டீ அடித்துக்கொண்டிருந்தார் ‘ – வயசாளி என்ற வார்த்தையை  சாம்ராஜிடம் இருந்து தான் முதன் முதலில் கேட்கிறேன்.

ஆவேச பிரகடனச் சுவரொட்டி மழையில் ஊறி பாதி சுவற்றிலும் பாதி வெளியிலும் காற்றில் ஆடியது

மலையாள அட்சரங்களை பார்த்ததும் மகள் பள்ளி செல்கிறாளோ எனும் நினைப்பு.’

திரைக்கதையை நான் வாசித்தது இல்லை . இது அவ்வளவு விவரணைகளுடன் சினிமாவாக விரிக்க அத்துணை சாத்தியங்களையும் உள்ளடக்கியதாக இக்கதை தோன்றுகிறது.

அருகே இருக்கும் போது பெரும்பாலானோருக்கு  தெரிவதில்லை எந்த அற்புதங்களும் !

பட்டாளத்து வீடு

இங்கே அமர்ந்து ரொம்ப நேரம் சிரித்தேன்

செவ்வாக்கியம்

ஏனோ தெரியவில்லை இதை ரசித்தேன் . கடையனாய் பிறந்த என்னை அடிக்காமல் வளர்த்த  இரு தமக்கைகளும் வாயாலும் கையாலும் அடி வாங்காமல் புக்ககத்தில் இருக்கவில்லை என்பதை நினைத்ததால் இருக்கலாம்.

தொழில்புரட்சி

சும்மா இருந்து இருக்கலாம் அந்த தோழர்கள்என மாத சம்பளம் வாங்கிக்கொண்டு யாருக்கோ மாரும் அடித்துக்கொண்டு சொல்லிவிடலாம் நான் . என்ன செய்ய புரட்சி சில நேரங்களில் அல்ல பல நேரங்களில் யார் யாருக்கோ வறட்சியைத்தான் தந்துள்ளது தமிழ் நாட்டில் என வலி கலந்த பகடியுடன் எடுத்துரைத்தது

இந்தக் கதை.

மூவிலேண்ட் / பொன்வண்டு

இன்றும் தெய்வக் குத்தம் தான் பெண்கள் திரை அரங்கில்  சினிமா பார்ப்பது, ரேடியோ கேட்பது  என்பது..  என் வீட்டில்(என் அம்மா , அக்காக்களை பொறுத்தவரை ). அவர்கள் வளர்ந்த நடத்தப்பட்ட விதம் அப்படி .

அப்பாவின் வண்டி சத்தம் அடுத்த தெருவில் கேட்கும் போதே இங்கு தொலைக்காட்சி நிறுத்தப்படும். வாசலில் நின்றிருந்தாலும் அடுத்த நொடி உள் அடங்க எப்படியோ கற்றிருந்தார்கள் அல்லது கற்பிக்கப் பட்டார்கள்என்னென்ன புதைந்ததோ அவர்கள் போன்ற அக்கால பெண்களுள்.

அவர்களின் அந்த நாட்களை காண்பித்தது இக்கதை :(

ஜார் ஒழிக

புரட்சியும் , துக்கமும் ,அறக் கொந்தளிப்பின் போதோ அல்லது   பசியின் போதோ  விதி விலக்குகளை துணை கொள்ளலாம் என்பதை அழகாய் சொன்னது எனக்கு மிகவும் உவப்பாய் இருந்தது.

குறிப்பாக .. ‘அம்மா அரிசியை பானையிலும், மண்எண்ணெயை அடுப்பின் கீழே வைத்த பின் தான் அழுதாள்.

நம்மை கூர்ந்து நோக்கினால் நாமும் அப்படித் தான் என்பதற்கு பல நிகழ்வுகள் என் முன் நிழலாடின.

நாமும் மனிதன் தானே என்று தொடர்ந்து வாசித்தேன் :) ‘

தோழர் மூர்த்தியின்ங்கொம்மாலக்க‘ – திருச்சியில் எனது பள்ளி நண்பன் (தேவக்கோட்டை சொந்த ஊர்) எடுத்ததற்கு எல்லாம்ங்கோத்தாலக்கஎன்பான் . அவன் பள்ளி முடித்து தேவக்கோட்டை செல்ல நான் அந்த வார்த்தையைபள்ளியில் பேசாமல்சென்னையில் கல்லூரியில் பரப்பியதில் பெரும்பங்கு ஆற்றினேன்.அதுவும் இதுவும் ஒன்றல்ல ஆனாலும் ஞாபகம் வந்தது.  :)

வர்க்கம்‘ இதற்கு என் ஞாபகத்தில் என்றும் நிலைக்கும் ஒரு வரி  -> உங்களுக்கு சுத்தம் அவருக்கு அழுக்குஇந்த இடத்தில் சாம்ராஜுக்கு சிறப்பு நன்றி சொல்ல வேண்டும்.

சாம்ராஜ் அவர்கள் எங்களிடம்  லண்டனில்  சொன்னதுஒரு புத்தகத்தை வாசிக்க எடுத்தால் ..அதை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு அந்த புத்தகத்திற்கும் உண்டு‘. அதை இந்த இரண்டு தொகுப்புகளும் செவ்வனே செய்துள்ளன என எந்த தயக்கமும் இன்றி சொல்வேன்  .

அவரின்  கதைக்களங்கள்  மிக துல்லியமாக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அந்த ஊர்களுக்கு ஒரு முறையேனும் செல்ல வேண்டும் என்று தோன்ற வைக்கிறது.

அடுத்ததாக , நான் இது வரை எந்த புத்தகத்தையும் வாசித்தபின்பெற்றது ,கற்றது , மகிழ்ந்தது , மனம் கசிந்தது என தொகுத்து எழுதியது இல்லை, அதோடு முக்கியமாக அதன் ஆசிரியருக்கோ அல்லது எனது ஆசிரியரான தங்களுக்கோ  வாசிப்பனுபவத்தை பகிரும் வாய்ப்பும் கிட்டியது இல்லை.

இரண்டும் நடந்தது சாம்ராஜ் அவர்களால் . அவருக்கு  எனது மனமார்ந்த நன்றி .

விரைவில் வெளியாக உள்ள அவரின் முதல் நாவலான கொடை மடத்தை ‘ ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் .

அன்புடன்,

கே.எம்.ஆர்.விக்னேஸ் 

முந்தைய கட்டுரைஎடை!
அடுத்த கட்டுரைநூற்கொடை, நடுவே கடல்