நாலாயிர திவ்யப் பிரபந்த வகுப்புகள் அறிவிப்பு

சென்ற அக்டோபரில் நிகழ்ந்த நாலாயிர திவ்யப்பிரபந்த வகுப்புகள் உருவாக்கிய ஆழ்ந்த உணர்வைப்பற்றி பங்குகொண்டவர்கள் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நம்மால் பிரபந்தங்கள் போன்ற செவ்வியல் இலக்கியங்களுக்குள் எளிதாக நுழைய முடியாது. உரைகள் அர்த்தங்களை அளிக்குமே ஒழிய வாசிப்பனுபவத்தை அளிப்பதில்லை. முறையான ஒரு தொடக்கம் ஒரு பெருந்திறப்பாக அமையும். இந்த அமர்வுகளில் திட்டமிடப்பட்டிருப்பது அப்படிப்பட்ட ஓர் அறிமுகம்.

இந்த வகுப்பில் நவீன அழகியல் கொள்கைகளில் தேர்ச்சிகொண்ட இலக்கியத் திறனாய்வாளர் ஜா.ராஜகோபாலன் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தின் வரலாற்றுப்பின்னணி, தத்துவபின்னணி ஆகியவற்றை விளக்கி இன்றைய நவீன உள்ளம் கொண்ட ஒருவர் அதை அணுகுவதற்கான ஓர் அணுகுமுறையை அளிப்பார். பாடல்கள் மீதான அணுக்கவாசிப்பை இன்றைய பார்வையில் முன்வைப்பார். கூடவே பிரபந்தத்தை மரபான முறையில் ஆழ்ந்து கற்ற அறிஞரான மாலோலன் பிரபந்தத்தை அதற்குரிய ஓதுமுறைமையுடன் கூறுவார்

வைணவர்களுக்கு மட்டுமான அரங்கு அல்ல இது. மரபான முறையில் பக்திகொண்டவர்களும், இலக்கியவாசகர்களும் கலந்துகொள்ளலாம்.

தேதி : டிசம்பர் 8, 9, 10

கலத்ந்துகொள்ள விரும்புபவர்கள் எழுதலாம்:[email protected]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா 2023 : தங்குமிடம் பதிவு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2023 அழைப்பிதழ்