விஷ்ணுபுரம் விருந்தினர், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் பற்றிய செய்திகளை ஆவலுடன் வாசித்தேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆச்சரியம் இருந்துகொண்டே இருப்பதனால் எதிர்பார்ப்பும் இருக்கும். இந்த ஆண்டு ஆச்சரியம் இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் கலந்துகொண்டது. லதா அருணாச்சலம், இல சுபத்ரா இருவரையும் உங்கள் அறிவிப்பை கண்டபின் போய் வாசித்துப்பார்த்தேன். மிகுந்த அர்ப்பணிப்போடு தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறார்கள். அவர்களின் பணியை பாராட்டவேண்டும்.

இங்கே சாகித்ய அக்காதமி விருது இந்திய மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்பவர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் வழியாக மொழியாக்கம் செய்தால் கிடைப்பதில்லை. ஆனால் ஆங்கிலம் வழியாகத்தான் நிறைய மொழியாக்கங்கள் வருகின்றன. நாம் உலகைப்பார்க்கும் சன்னல் அது. அந்த மொழியாக்கத்தைச் செய்பவர்களை கௌரவிப்பது சிறந்த விஷயம்.

நான் லதா அருணாசலத்தின் தீக்கொன்றை மலரும் பருவம் நாவலை வாசித்தேன். சரளமான மொழியாக்கம். நல்ல வாசிப்பனுபவத்தை அளித்தது. முக்கியமான ஆப்ரிக்க நாவல் அது.

எம். மகாதேவன்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருந்தினர்களை வாசித்துவிட்டு வருவதென்பது மிகப்பெரிய வேலை. ஆண்டுக்கு ஒருமுறை இந்த வாசிப்பே பெரிய பணியாக ஆகிவிடுகிறது. ஆனாலும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வாசிக்கிறேன். எல்லார் எழுத்திலும் ஒன்றையாவது வாசித்துவிடவேண்டும் என்பது என் எண்ணமாக உள்ளது. எல்லா வகையான எழுத்தாளர்களின் பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மலேசிய எழுத்தாளர், இலங்கை எழுத்தாளர் என்று எல்லா தரப்புக்கும் இடமிருக்கிறது இந்த அவையில், அனைவருக்கும் நன்றி

கிருஷ்ணராஜ்

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

முந்தைய கட்டுரைகுடிமைப்பண்பு- கடிதம்
அடுத்த கட்டுரைபிரபுத்தபாரதம்