விஷ்ணுபுரம் விழாவின் உரையாடலில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்களை கவனித்தேன். அவர்களில் பலரை நான் இன்னும் தீவிரமாக வாசிக்கவில்லை. இன்றைக்கு ஏராளமானபேர் எழுதுகிறார்கள். எல்லாரையும் ஒன்றுபோலவே முகநூலில் அவர்களின் நண்பர்கள் வழியாக அறிமுகம் செய்கிறோம். அவர்களின் எழுத்தைப் பற்றிப் பேசப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே எழுத்தாளர்களை நாம் சரியாக அறிமுகம் செய்யமுடியாமல் போகிறது. இந்தவகையான விழாக்கள் வழியாக அவர்களை அறிந்துகொள்வது முக்கியம். இதில் ஒரு பரிந்துரை இருக்கிறது. அது அவர்களைக் கவனிக்கச் செய்கிறது.
நான் இந்த எழுத்தாளர்களை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சந்திரா எழுதிய காட்டின் பெருங்கனவு என்ற தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இயல்பாக எழுதப்பட்ட கிராமத்துச் சித்திரங்கள் கொண்ட நல்ல தொகுப்பு. சந்திரா பெண்ணியப்பாவனைகள் ஏதுமில்லாமல் பெண்களின் வாழ்க்கையை ஆத்மார்த்தமாகச் சொல்லும் எழுத்தாளர் என நினைக்கிறேன்.
ரா. கமலவேணி
*
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருந்தினர்களுடனான உரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இன்றைக்குத் தமிழில் நிகழும் மிகப்பெரிய இலக்கிய விழா இது. இத்தனை எழுத்தாளர்களுக்கு அரங்கு அமைத்துக்கொடுத்து அனைவரையும் கவனிக்கப்படச்செய்யும் இந்த முயற்சி வணக்கத்துக்குரியது. இங்கே ஓர் எழுத்தாளர் வழியாக இதெல்லாம் நிகழ்கிறதென்று என்ணும்போது பெருமிதம் உருவாகிறது.
இந்த விழாவில் எப்போதுமே மலேசியா, இலங்கை எழுத்தாளர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறை வாசு முருகவேல் ஈழத்து எழுத்தாளராகவும் அர்வின்குமார் மலேசிய எழுத்தாளராகவும் கலந்துகொள்வது நிறைவானது. இலங்கையில் இன்னும் பல முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்கள் அழைக்கப்படவேண்டும்
ரவிச்சந்திரன்
விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்
விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா
விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்
விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்
விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி
விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா
விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்