அறம், ஜிகிர்தண்டா, சைரன்

அறம் வாங்க  

அறம் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

சைரன் தமிழ் பட டிரைலரில் ஜெயம் ரவி ஜெயிலில் அறம் படிப்பது போல காட்சி. பின்னர் கொலைகள் செய்கிறார். யானைடாக்டர் கதையில் இருந்து ஜிகிர்தண்டாவின் கிளைமாக்ஸ் உருவப்பட்டுள்ளது. ஏற்கனவே இடும்பன் என்ற படத்தில் யானைடாக்டரின் முக்கியமான காட்சிகள் இருந்தன. கோட்டி படத்தின் செல்வாக்கு ஜோக்கர் படத்தில் இருந்தது. அறம் தொகுப்பு சினிமாக்காரர்கள் நடுவே ரொம்பவே பிரபலம் போலிருக்கிறது

.கிருஷ்ணன்  

நான் ஜிகர்தண்டா 2 பார்த்துக் கொண்டிருந்தேன். திரையரங்கில்.இதிலும் யானை டாக்டரிலிருந்து சீன் பிடித்துள்ளனர்.. ஆனால் நல்ல விதமாக அதே நெகிழ்ச்சியுடன் கடத்தியுள்ளனர். அறம் இன்ஸ்பிரேஷனில் வந்த சினிமா சீன்களில் ( கூட்டத்தில் ஒருவன், மெர்சல் , கர்ணன் )இதுவே நியாயமானதாக தோன்றுகிறது

காளி

அன்புள்ள நண்பர்களுக்கு,

ஜெயகாந்தன் சொன்னதுபோலஇருப்பவனிடமிருந்து இல்லாதவன் எடுத்துக் கொள்கிறான்இவர்கள் இன்னும் இருநூறாண்டுகள் இவர்களின் எல்லா சினிமாக்கதைகளுக்கும் சீன்பிடிக்குமளவுக்கு என் புனைவுலகம் பெரியது.

அறம் இதுவரை தமிழகத்தில் வெளியான சிறுகதைத் தொகுதிகளில் அதிகமாக விற்றது. புகழ்பெற்ற வணிக எழுத்துக்களுடன் ஒப்பிட்டாலும்கூட அறம் அளவுக்கு அவற்றின் வாசிப்பும் விற்பனையும் இருக்காது. இன்று எங்கள் பதிப்பகத்தில் மூன்றுமாதத்திற்கு ஒரு பதிப்பு என அச்சிட்டுக்கொண்டே இருக்கிறோம்.

 யானை டாக்டர் திரைக்கதை உருவாகி, நடிகர்களின் பார்வைக்குச் சென்றது. வயோதிகராக நடிக்க எவரும் சித்தமில்லை. ஆகவே அது காத்திருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைமிதவாத இஸ்லாம்
அடுத்த கட்டுரைஆலயங்களை அறிதல் – லிங்கராஜ்