தமிழ்க்கல்விக்கான பல நிலைகளிலான பாடநூல்களை உருவாக்கியவராக கார்மேகக் கோனார் மதிப்பிடப்படுகிறார். (புகழ்பெற்ற கோனார் உரையுடன் கார்மேகக் கோனாரின் பெயர் சிலரால் தொடர்புபடுத்தப்படுகிறது. கோனார் உரைகளை எழுதியவர் ஐயம்பெருமாள் கோனார்) கார்மேகக் கோனார் எழுதியவை வழிகாட்டி நூல்கள் அல்ல, பாடநூல்கள்.தமிழில் உயர்கல்வி உருவாகி வந்த தொடக்க காலகட்டத்தில் அன்றுவரையிலான தமிழ் பதிப்ப்புகள் மற்றும் தமிழ் ஆய்வுகள் ஆகியவற்றை கருத்திலெடுத்துக்கொண்டு கார்மேகக் கோனார் உருவாக்கிய பாடநூல்கள் முன்னோடியானவை.
தமிழ் விக்கி ஆ.கார்மேகக் கோனார்