ஒட்டுமொத்த இந்திய வரலாற்றை ஒற்றைப்பரப்பாக கருத்தில்கொண்டு தமிழ்ப்பண்பாடு முதலிய வட்டாரப் பண்பாடுகளை இந்தியவரலாற்றின் பகுதியாக மட்டும் பார்க்கும் பார்வை கொண்ட தேசிய வரலாற்று இயக்கத்திற்கு மாற்றாக உருவாகி வந்தது தமிழியக்கம். அது தமிழ் வரலாற்றை தனித்தன்மை கொண்ட ஒரு வரலாற்றுப்பரப்பாக அணுகுவது. தமிழ்வரலாற்றை தனித்த பண்பாட்டு- வரலாற்றுப் பரப்பாக கருதி விரித்தெழுதும் வரலாற்றெழுத்து முறையின் முன்னோடி சதாசிவப் பண்டாரத்தார் என மதிப்பிடலாம்
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்
