அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வில் விருந்தினர்களாக வரவிருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளை தேடிப் படித்துக்கொண்டிருக்கிறேன். இவர்களில் பலரைப்பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. இத்தனைக்கும் நான் மிகத்தீவிரமாக இலக்கிய இதழ்களை படிப்பவன். இணைய இதழ்களின் சிக்கல் என்னவென்றால் அவற்றில் உள்ளடக்கம் மிகப்பெரியதாக உள்ளது. ஆகவே நாம் முன்பெல்லாம் அட்டை முதல் அட்டை வரை படிப்பதுபோல படிப்பது இல்லை. எவரேனும் சிபார்சு செய்தால்தான் நாம் படிக்கிறோம். ஆகவே பல எழுத்தாளர்கள் கண்களுக்குப் பட்டாலும் மூளையில் பதிவது இல்லை. இந்த அறிமுகங்கள் அந்த எழுத்தாளர்களுக்கு பெரிய அளவில் அடையாளத்தை அளிக்கின்றன. நன்றி.
செல்வா குமாரசாமி
அன்புள்ள ஜெ,
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழாவில் பங்கெடுக்கும் விருந்தினர்களில் பெண்கள் மிகுதி. முன்பு ஏன் பெண்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று கேட்டு நான் உங்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன். குறை தீர்ந்தது. நன்றி.
ஆர்.மாதங்கி
விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்
விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா
விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்
விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்
விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி
விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா
விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்