ஆண்டுதோறும் ஷில்லாங்கில் மேகாலய அரசின் உதவியுடன் நடத்தப்படும் செரிபிளாஸம் திருவிழா புகழ்பெற்றது. அதன் ஒரு பகுதியாக நிகழும் இலக்கிய விழா வரும் நவம்பர் 14 முதல் 16 வரை நிகழ்கிறது. இம்முறை நான் பங்கேற்கிறேன்.
ஏழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கமான Abyss நாவல் ( மொழியாக்கம் சுசித்ரா ராமச்சந்திரன்) பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம் சார்பில் நண்பர் ‘குவிஸ்’ செந்தில்குமார் கலந்துகொள்கிறார். நான் நவம்பர் 13 காலை திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வழியாக கௌஹாத்தி சென்று ஷில்லாங் செல்கிறேன். ஷில்லாங்கில் இப்போது பத்து டிகிரி குளிர் வரை இறங்கும் என்றனர். குளிராடைகள் ஏற்கனவே தயாராக உள்ளன. பயன்படுத்த வேண்டியதுதான்.
உண்மையில் இனி இலக்கிய விழாக்களின் காலம். அமெரிக்கா சென்றமையால் டாட்டா இலக்கிய விழாவுக்கான சிறப்பு அழைப்பை தவறவிட வேண்டியதாயிற்று.