ஆளுமைப்பயிற்சி- கடிதம்

அன்புள்ள ஜெ ஆசிரியர் அவர்களுக்கு,

நலம் பெற வேண்டுகிறேன்.

உங்கள் தளத்தின் மூலம் தில்லை செந்தில் பிரபு அவர்களை அறியவும், அவரின் யோக வகுப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் பங்கேற்கவும் முடிந்தது, அதற்கு மிகப்பெரிய நன்றி  உங்களின் பாதங்களில்.

நீங்கள் பலமுறை கூறியது போல ஓர் ஆசிரியரின் நேரடி வகுப்பு ஏன் தேவை என்பதை முழுதாக உணர முடிந்தது

. தில்லை அவர்களின் ஆளுமை/தலைமை பண்பு

. அவரின் புன்னகை பூத்த முகம் ( மிகவும் கறாரானவர் சிரித்த முகத்துடன்)

. நாம் மிகப்பெரிய கனவுகளை மிகச்சிறிய செயல்களை கொண்டுத்தொடங்க முடியும் என்கிற நம்பிக்கை

இவையனைத்தும் அளிக்கும் ஒர் ஆன்மீக அனுபவம், இது ஆசிரியரின் உரையடாலும் நேரடி தொடர்பில மிக விரைவாக நடைபெறுவதை இந்த இரண்டு மாதங்களில் உணர முடிந்தது.அவரின் உளகுவிப்பு வகுப்பு அதை பயின்றதுடன், கடந்த இரு மாத தொடர் பயிற்ச்சி அழகான மாற்றங்களை உருவாக்குகிறது. பல நிகழ்வுகள் ஆனால் இதை மட்டும் தொகுத்து சொல்கிறேன்.

. Happy Family: பெரும்பாலும் என் மீதான குற்றச்சாட்டு, நான் வாசிப்பு, மலையேற்றம், அலுவலகம் அகியவற்க்கு முன்னுரிமையயும், குடும்ப வாழ்க்கைக்கு அதே அளவு ஈடுபாடு இல்லாதவனாகவும் இருக்கின்றேன்று, இதில் மிகபெரும் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. தில்லை அவர்களின் கூறியஇந்த கணம் அதுவே உண்மை அதில் கவனம் சிதறாமல் இருங்கள்இது பலமுறை படித்ததுதான், ஆனாலும் அனுபவிக்க கற்று கொடுத்திருக்கிறார். இது இல்லற வாழ்வில் என் நுட்பம், என் ரசனை அவர்களுக்கு புரியவில்லை என்பதிலுருந்து நான் அவர்களிடம் இருக்கும் வேறு விதமான ரசனையை கவனிக்க தவறி இருக்கிறேன் என்பதை உணர செய்தது. இது சொல்வது மிகையாக தோன்றலாம், இது ஓர் குழந்தை அனைத்தையும் பார்க்கும் ரசனையாக உணர்கிறேன். இது தொடக்கம் மட்டுமே என்றும் உணர்கிறேன்

. Prioritation: எதற்க்கு முன்னுரிமை அளிப்பது, நான் 35 பேர் கொண்ட குழுமத்தை வழி நடத்தும் தலைமை பொறுப்பில் இருப்பதால், ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு விதமான தேவைகள், ஆனாலும் எவ்வித தலைவலியும் இல்லாமல் எது வேண்டும் எனத்தேர்ந்தடுப்பதில் இருக்கும் முன்னேற்றம் அதுவும் ஓர் ரசனையான அனுபவமாக மாறி இருக்கிறது

. Health: என் உடல் ஆரோயக்கியத்தை நான் உற்று நோக்கும் பண்பு, மிக ஆச்சரியமாக நான் விரும்பம் உணவுகளில் பெரும் மாற்றம். மிக எளிய  உணவுகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று மிக எளிதாக உணர முடிகிறது

. Easy execution of other பலactivities: நான் கோவையில் இருப்பதால் சுற்றிலும் மலைச்சிகரங்கள். பெரும்பாலும் ஓர் இடத்துக்கு மாதம் ஒர்முறை செல்வது வழக்கம். ஆனால் இப்போது பெரும்பாலும் அனைத்து வாரங்களும் செல்கிறேன் (October to December is the best season to visit these mountain). இப்போது மனைவியும் என்னுடன் வருகிறார்கள்

இந்த 35 வயதிலேயே மிக அழகாக ஓர் வழி பாதை தென்படுவதாக தோன்றுகிறதுஅதில் உங்களையும், செந்தில் அவர்களையும் மற்ற ஆசிரியர்களையும் கண்டைவது அந்த இயற்கையின் கருணையாகவே ஏற்று கொள்கிறேன். ஆதி இயற்கைக்கும் உங்களுக்கும், செந்தில் உவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி.

அன்புடன்

விஜி

அன்புள்ள விஜி

உண்மையிலேயே ஒரு முதன்மை நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஒருவர் கற்பிக்கும் உளப்பயிற்சி இது. அதன் பாடங்கள் அவரே வாழ்வில் கண்டுகொண்டு வெற்றிபெற்றவை. ஆகவே நிர்வாகிகள், தொழிலியற்றுவோர் ஆகியோருக்கு முக்கியமானவை

ஜெ 

முந்தைய கட்டுரைமலர்மஞ்சம்- கடிதம்
அடுத்த கட்டுரைசீதை, முதல் கம்பராமாயண ஆய்வு