மு.மேத்தா

ஜெயப்பிரகாஷ் நாராரயணன் உருவாக்கிய மாணவர் கிளர்ச்சி, வங்கத்தில் உருவாகி இந்தியாவெங்கும் பரவிய நக்ஸலைட் கிளர்ச்சி (இடதுசாரி தீவிரவாத குழுவினர்) ஆகியவை அந்த சீற்றத்தின் வெளிப்பாடுகள். மு.மேத்தா கவிதைகளில் அந்தச் சீற்றம் புனைந்துரைக்கப்பட்ட வரிகளாக வெளிப்படுகிறது. அக்காலகட்டத்தில்தான் படித்த இளைஞர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை தாங்களே தேர்வுசெய்யும் உணர்வுநிலையை பொதுவாக அடைந்தனர். காதல் என்பது அன்றைய இளைஞர்களின் உணர்ச்சிகரமான பேசுபொருள். அவ்வுணர்வுகளை மு.மேத்தா வெளிப்படுத்துகிறார். அத்துடன் அன்று பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், வரதட்சிணை போன்ற சமூகமுறைகளுக்கு எதிராக சீற்றம் எழுந்தது. அவையும் அவர் கவிதைகளில் உள்ளன. அவை அன்றைய உணர்வுகளை வெளிப்படுத்தியமையால் இளைஞர்களால் விரும்பப்பட்டன.

மு.மேத்தா

மு.மேத்தா
மு.மேத்தா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅஞ்சலி: ஜான் ஐசக்
அடுத்த கட்டுரை“ஜெட்லாக்”