அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் சங்கத்தின் (ALTA) விருது விழா நவம்பர் 11 அன்று நிகழ்கிறது. அதன் விருதுக்கான இறுதிப்பட்டியலில், அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான STORIES OF THE TRUE, ஆறு நூல்களில் ஒன்றாக உள்ளது. நவம்பர் 11 அன்று விழாவில் ஆறு நூல்களில் ஒன்றுக்கு விருது அறிவிக்கப்படுகிறது.
முன்பதிவுசெய்துகொண்ட மூவாயிரம்பேர் கலந்துகொள்ளும் விழாவுக்கு பிரியம்வதா ராம்குமார் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இன்று பிரியம்வதாவும் கணவர் விஜயரங்கனும் கிளம்பிச் செல்கிறார்கள். பிரியம்வதாவுக்கு வாழ்த்துக்கள்.
https://www.literarytranslators.org/conference