கிறிஸ்துவின் ரத்தத்தை ஒட்டுண்ணியாய் உறிஞ்சிக் கொண்டிருக்கும் இந்த பாவ ஜென்மங்களை யோவான் எப்படி இரட்சித்திருப்பான் என்பதை ஒரு மென்புன்னகையோடு திருவருட்செல்வி என்ற கதையில் உணரமுடிகிறது. தன் தந்தையின் செயல்பாடுகளால் அவரிடமிருந்து விலகியிருந்த யோவான், தன் அப்பாவி அப்பாவின் போதாமைகளை பெரிதும் பொருட்படுத்தாத செல்வியாகத் தான் மாறியிருக்க கூடும் என்று எண்ணிக் கொள்ள முடிகிறது.