புதியவானம்

அமெரிக்காவில் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கென சென்றுகொண்டே இருக்கிறேன். சென்ற ஆண்டு வந்தபோது நியூயார்க் முதல் கலிஃபோர்னியா வரை காரிலேயே இருகரைப்பயணம் ஒன்றை மேற்கொண்டேன். இந்தியாவில் குமரி முதல் காஷ்மீர் வரை சென்று திரும்பி வந்து மீண்டும் செல்வது போல அவ்வளவு தொலைவு. இம்முறையும் அதேயளவு கார்ப்பயணங்கள். 

ஹூஸ்டன் வந்து, அங்கிருந்து ஆஸ்டின், ராலே வழியாக பூன். அதன்பின் ஃப்ளோரிடாவில் மயாமி. அங்கிருந்து சியாட்டில். அங்கே ஓர் உரை, ஒரு வாசகர் சந்திப்பு. அங்கிருந்து போர்ட்லண்ட். அங்கே நேற்று ஒரு வாசகர் சந்திப்பு. இனி கனடாவின் வான்கூவர். அங்கே நிகழ்வுக்குப்பின் டொரெண்டோ. அங்கே கூட்டம், சந்திப்பு. பின்பு நியூயார்க், நியூஜெர்ஸி.

நேற்று சியாட்டிலில் இருந்து காட்டுப்பாதை வழியாக போர்ட்லண்ட் வந்தேன். உடன் ராலே ராஜன் சோமசுந்தரம், பிரபு, விஸ்வநாதன், பிரமோதினி. இலக்கியம், நகைச்சுவைகள் என பேசிக்கொண்டே வந்தோம். ராஜன் இசையமைப்பாளர். இசை பற்றிய பேச்சுக்கள் நடுவே  சட்டென்று எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் எழுந்து வந்தன. குறிப்பாக படம் தொடங்கும்போது எம்.ஜி.ஆர் பாடிக்கொண்டு வரும் அதியூக்கப் பாடல்கள். தன்னம்பிக்கை, வாழ்க்கைமீதான பிரியம் ஆகியவை வெளிப்படுபவை அவை.

ஓரிரு பாடல்களை ஒலிக்கவிட்டோம். புதிய வானம் புதிய பூமி அந்த மனநிலையை பலமடங்கு தீவிரப்படுத்திய பாடலாக இருந்தது. இருண்ட காடுகள், முகில்வானம், பனிமலைச்சிகரம், நீல ஒளியுடன் ஆறுகள்மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று இவர் வாழ்வில் விளக்குகிறார்

முந்தைய கட்டுரைதியானம், உளக்குவிப்புப் பயிற்சி முகாம்
அடுத்த கட்டுரையானை டாக்டரும் ஒரு யானையும்