குருகு இதழில்…

அன்புள்ள நண்பர்களுக்கு 

குருகு எட்டாவது இதழ் வெளிவந்துள்ளது. நவீன நாடக செயல்பாட்டாளர்வெளி ரங்கராஜனுடையநேர்காணல் இந்த இதழில் இடம்பெறுகின்றது. ரங்கராஜன் நவீன நாடகத்திற்காகநாடக வெளிஎன்னும் பெயரில் தனி இதழ் நடத்தியவர், தமிழ் நவீன நாடக இயக்க துவக்க காலத்திலிருந்து இன்றளவும் அதனுடன் பயணித்து வருபவர் .

 சென்ற இதழில் வெளிவந்த ஹெச்.எஸ்.சிவபிரகாஷுடையமனம்கட்டுரையின் தொடர்ச்சியாக, குரு நித்யசைதன்ய யதியின்இந்திய உளவியல்என்னும் கட்டுரை அழகிய மணவாளன் மொழிபெயர்ப்பில் வெளிவருகிறது. ஆய்வாளர் அ.கா. பெருமாளின் நாட்டார் தெய்வ வடிவங்கள் குறித்த கட்டுரை இந்த இதழில் வந்திருக்கின்றது.

அறிவியல் தொடர் ரியலிசம் குறித்தும், தெய்வ தசகம் தொடர் படைப்பு படைத்தவன் குறித்த பல்வேறு வாதங்களை ஆய்வதாகவும் அமைந்திருக்கின்றது. உடன் தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கு. அழகிரிசாமியின் நாடகங்கள் குறித்த வெளி ரங்கராஜனின் கட்டுரையும் இந்த இதழில் வருகிறது. இந்த ஆண்டு கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு.

 தொடர்ந்து குருகு இதழை வாசித்து வெவ்வேறு தளங்களில் குருகின் கட்டுரைகளை முன்வைக்கும் நண்பர்களுக்கு இந்த இதழும் மகிழ்ச்சியளிக்கும் என நம்புகிறோம்

 நன்றி 

 http://www.kurugu.in 

 பிகுகுருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்

https://twitter.com/KuruguTeam 

அன்புடன்

 குருகு

முந்தைய கட்டுரைஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை
அடுத்த கட்டுரைமூன்று அறிதல்முறைகள்