தன்னுரை நூல் பற்றி…

அன்புள்ள ஜெமோ

இந்தக் கட்டுரை உங்கள் கவனத்துக்கு வந்திருக்கும் என்று எண்ணுகிறேன். உங்கள் ‘தனிக்குரல்’ [சொற்பொழிவுகள்’ என்ற கட்டுரை நூலைப்பற்றிய விரிவான எதிர்வினை இதில் உள்ளது. மதமாற்றத்தடைச்சட்டம் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களுக்கு இந்த கட்டுரையில் ஆதாரபூர்வமான நிதானமான பதில்கள் உள்ளன என்பது என் எண்ணம். மதமாற்றம் போன்ற விஷயங்களில் நடுநிலைமையாக தோற்றம் அளிக்க வேண்டும், முற்போக்காக தோற்றம் அளிக்க வேண்டும் என்பதையெல்லாம் விட உண்மையைச் சொல்லவேண்டும் என்று எவரும் நினைப்பதில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது

மேலும் அக்கட்டுரை வழியாக எனக்கு ஏற்பட்ட எண்ணமும் ஒன்று உள்ளது. நீங்கள் அறம் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால் அதையெல்லாம் உணர்ச்சிகரமாகவும் கவித்துவமாகவும் பேசி மனதை உருகவைத்துவிட்டு தாண்டிச் சென்றுவிடுகிறீர்கள். அவ்வாரு அருவமான ஓர் அறம் உண்டா என்ன? அறவுணர்வு என்பது வாழ்க்கைச் சூழல்களினாலும் பண்பாட்டு மரபினாலும் உருவாகக் கூடியது. அந்த சூழலையும் மரபையும் கவனிக்காமல் இப்படி பேசிக்கொண்டிருப்பதனால் என்ன பயன் இருக்க முடியும்?

மேலும் நம் பண்பாடும் சூழலும் திட்டமிட்டு அழிக்கப்படும் ஒரு வரலாற்றுத்தருணத்தில் தீர்க்கதரிசிகளைப்போல பெரிய பெரிய விஷயங்களைச் சொல்லிக்கோண்டிருப்பது ஒரு வகையான தப்பித்தல் மட்டும்தான் என்றுதான் நான் நினைக்கிறேன். உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்வதற்கான திராணி இருந்தால் நம்முடைய தொன்மையான அறமரபு ஏன் எப்படி இல்லாமலாகிக் கொண்டிருக்கிறது, அதற்கு எதிரான சக்திகள் என்னென்ன என்றெல்லாம் நீங்கள் சிந்தனைசெய்திருப்பீர்கள்.

உங்கள் உரைகளின் ஒரு பகுதி மழுப்பல். இன்னொரு பகுதி தரையில் கால் பரவாத உயர்நத சிந்தனைகள். இன்னும் யதார்த்தமாக நீங்கள் சிந்தித்திருந்தால் இந்தச் சொற்பொழிவுகள் இன்னும் உண்மையாக இருக்கும். அப்போது அவை இம்மாதிரி கவித்துவமான பேருரைகளாக இருக்காது.  ஆவேசமும் அறக்கோபமும் கொண்டவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்

ஜெயமோகனின் ‘தனிக்குரல்’-I

http://ecoscipsy.wordpress.com/2009/02/02/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-i/

 

ஜெயமோகனின் ‘தனிக்குரல்’-II

http://ecoscipsy.wordpress.com/2009/02/03/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-ii/

 

சங்கர ராமன்
[தமிழாக்கம்]

அன்புள்ள சங்கர ராமன்

உங்கள் கடிதத்தில் உள்ள கருத்துக்கள் நான் சொல்லும் உணர்ச்சிகளுக்கு மறுபக்கமாக உள்ளன. நான் என் சொற்பொழிவுகளில் எப்போதும் உண்மையாகவே வெளிப்படுகிறேன். மானுட அறம் குறித்துப் பேசப்போனால் அது அருவமாகவே இருக்க முடியும். அதை விளக்க முடியாது, ஆனால் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளதாகவும் அது இருக்கும். நான் பேசுவது மானுட அறத்தை. அரசியலறம் ,மதம்சார் அறம் ,இலக்கிய அறம், நீதி, சட்டம், ஆசாரம், ஒழுக்கம் அனைத்துமே அதைத்தான் வேர்நிலமாகக் கொண்டிருக்கின்றன. பிற அனைத்துக்கும் ஆதாரமாக உள்ள அதை  பிறவற்றைப் பற்றிப் பேசுவதுபோல வரையறை செய்து பேசமுடியாது

ஜெ

இந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்

தன்னுரைத்தல்

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 1
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 2