அரசூரில் இருந்து வரும் ஒரு வயதானவர்களின் கோஷ்டி, அதே அரசூரில் பிறந்து, இப்போது டெல்லியில் அரசு அலுவலத்தில் வேலைபார்க்கும் சின்ன சங்கரன் உடன் டெல்லியைச் சுற்றிப்பார்த்துவிட்டு ஹரித்துவாருக்கு வந்து சேர்கிறது. அந்தக் குழுவை வழிநடத்திச் செல்பவர் லோகசுந்தரி பாட்டி.