அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories of The True இலக்கிய மதிப்பு மிக்கThe American Literary Translators Association (ALTA) மொழியாக்க விருதின் நீள்பட்டியலில் முன்பு இருந்தது. உலகளாவ வெளிவந்த மொழியாக்கங்களில் இருந்து 24 நூல்கள் அந்த பட்டியலில் இருந்தன. இப்போது இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகம் முழுக்க இருந்து பரிசீலிக்கப்பட்ட நூல்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆறு நூல்களில் ஒன்றாகியுள்ளது. இந்த இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது என்னுடைய நூல்கள் அமெரிக்கா அமெரிக்கப் பதிப்பக வெளியீடுகளாக வருவதற்கான வாசல்களை திறந்துள்ளது. மூன்று நூல்கள் உடனடியாக வெளிவரவுள்ளன.