முடியாட்டம்

ஜெ.

அன்றைய கேரளம் என்பது உண்மையில் ஒரு பைத்தியக்கார விடுதி தான் போல. தண்டபுலையர்களையும் குழிப் புலையர்கலையும் அடிமைகளாக வயல் வேலைக்கு பயன்படுத்தும் தம்புரான்கள் அவர்களை பதினாறு மணிநேரம் வேலை வாங்குகிறார்கள், நிலத்தில் அவர்கள் உணவு நீர் அறுந்த அனுமதியில்லை அப்படி செய்தால் தீட்டு என கருதி நிலம் சுத்தபடுத்தடும். ஆனால் புலையச்சிகளை புணர தினம் ஒரு பெண்ணை அழைத்து வந்து கொடுமை படுத்தி கொலை செய்கிறார்கள். ஆக சாதி என்பதை மனிதன் சிலரை அடிமையாக வைத்து கொள்ள சாதியை காரணமாக வைத்து கொள்கிறான் .

நம்பூதிரிய
நாயர் தொடக்கூடாது,
நாயரைக் கண்டா ஈழவர்
பன்னிரண்டடி தள்ளி
நிக்கணும், புலையர்
அறுபத்தாறடி தள்ளி
நிக்கணும், பறையர்கள்
நூறடி தள்ளி, இதுபோக
தோட்டியும் காட்டு
நாயக்கனும் பகலில்
கண்ணிலேயே படக்கூடாது.

இதை எல்லாம் எப்படி புறிந்து கொள்வது என்றே தெரியவில்லை..

ஆனால் யாதோன்றுக்கும் ஒரு இறுதி இருக்கிறது அல்லவா அந்த முதல் தீ தெய்வத்தின் ஆணை என எழுந்து நிற்கிறது அது இங்கே நங்கேலியன்னையாக பாஸ்கர பிள்ளை பெரியதம்புரம் சிரசில் தன் இட கழலை வைக்கிறது. அழித்து காக்கும் அன்னை அல்லது தன்னை பலியிட்டு காக்கும் அன்னை . நங்கேலி தன் சிரமாறுத்து காத்தாள் . நங்கேலி கோவில் வரும் நடன சடங்கு வரும் இடத்தில் அந்த ஆடலில் நீரில் மிதக்கும் படகாக அலை அலையாக நாமே ஆடுவது போல் உள்ளது…. போர்க் ரோஸ்ட்டுக்கு பிறகு நான் வாசித்த இரண்டாம் கதை இது.

அஜிதனுக்கு வாழ்த்துக்கள்

முடியாட்டம் – அஜிதன்

ஏழுமலை.

அன்புள்ள ஜெ

அஜிதனின் முடியாட்டம் வாசித்தேன். முதல் பார்வைக்கு ஒரு மாபெரும் சமூக ஒடுக்குமுறை வரலாற்றின் சித்திரம். அதில் இருந்து மானுட பிரக்ஞை எவ்வகையிலெல்லாம் தன்னை விடுவித்துக்கொள்கிறது என்பதுதான் மெய்யான கதை. ஆனால் இப்போது மூன்றாம் முறை வாசிக்கும்போது அது வேறு வேறு தளங்களுக்குச் செல்கிறது. தெய்வங்கள் உருவாகி வரும் விதம், தெய்வங்களுக்கும் மனிதனுக்குமான உறவு பற்றி எல்லாம் சிந்திக்கச் செய்கிறது. ஆனால் அடிப்படையில் பலவகையான  வன்முறையின் பழி வழியாக உருவாகி வந்த மானுட சமூகம் அதை எப்படி சப்ளிமேட் செய்துகொள்கிறது என்பதையும் அதன் வழியாக மானுட கலாச்சாரமே எப்படி உருவாகி வந்திருக்கிறது என்பதையும் காட்டும் கதை என நினைக்கிறேன். அஜிதன் கதைகளிலேயே இதுவே சிறந்தது. அண்மையில் வாசித்த மிகச்சிறந்த கதை

எம்.பாஸ்கர்

முந்தைய கட்டுரைஓவியக்கல்வி, புதிய தலைமுறை- கடிதம்
அடுத்த கட்டுரைநெ.து.சுந்தரவடிவேலு