நாலாயிர திவ்விய பிரபந்தம்- ஒரு பயிற்சி வகுப்பு

தமிழ்ச்சூழலில் நம்மிடம் தொடர்ச்சி அற்றுப்போயிருப்பது நம் பேரிலக்கியங்களை வாசிக்கும் முறைதான். செவ்விலக்கியங்கள் இன்று அச்சில் அனைவருக்கும் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை வாசிப்பதற்கான உளநிலையையும், வாசிப்புமுறையையும் பயிலாவிட்டால் அவற்றுள் நுழைய முடியாது. ஆனால் முறையான ஓர் அறிமுகம் நிகழ்ந்து, நம்மிடம் ஒரு தொடக்கம் உருவாகுமென்றால் அது வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு பயணமாக அமையும்.

சைவத்திருமுறைகள், நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகியவற்றை மத இலக்கியங்களாக, ஞானநூல்களாக, ஆன்மிக வழிகாட்டிகளாக அணுகலாம். ஆனால் அடிப்படையில் அவை இலக்கியங்கள். இலக்கியங்களாக அவற்றை வாசிப்பதே முதன்மையானது. அந்த வாசிப்பை அனைவருக்கும் அளிக்கும் ஒரு முயற்சி இது

வரும் அக்டோபர் 20, 21, 22 (வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் ஒரு பயிற்சி முகாம் ஒருங்கிணைக்கப்படுகிறது. நவீன இலக்கிய வாசகரும் விமர்சகரும் மரபிலக்கியப் பயிற்சி கொண்டவருமான நண்பர் ஜா.ராஜகோபாலன் நாலாயிர திவ்விய பிரபந்த வகுப்பு ஒன்றை நிகழ்த்துவார். உடன் மரபுசார்ந்த முறையில் பிரபந்தத்தைக் கற்றுக்கொண்ட மாலோலன் என்னும் நண்பர் நாலாயிர திவ்விய பிரபந்தங்களை ஓதி காட்டுவார். மரபான முறையில் கேட்டும், நவீன முறையில் புரிந்துகொண்டும் அப்பேரிலக்கியத்தை அணுகும் முறை இது.

ஐந்து அமர்வுகளிலாக, 20 மணி நேரத்தில் 200 பாடல்கள் அறிமுகம் செய்யப்படும். இது நாலாயிர திவ்வியபிரபந்தம் என்னும் பேரிலக்கியத்திற்குள் நுழையும் ஒரு பெருவாயில்.

மரபிலக்கியத்தை அறியும் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், நவீனக்கவிதை வாசகர்கள், வைணவர்கள் என எல்லா தரப்பினருக்கும் உரியது இப்பயிற்சி

ஆர்வமுள்ளவர்கள் எழுதுக

[email protected]

முந்தைய கட்டுரைபொதுப்பணம்
அடுத்த கட்டுரைஓவியக்கல்வி, புதிய தலைமுறை- கடிதம்