கிழக்கு நோக்கி…

அன்பு நிறை ஜெ ,

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நெடும் பயணம் ஒன்றை துவங்க உள்ளோம். சிங்கப்பூர், வியட்நாம், ஜப்பான், மலேசியா என முப்பது நாட்கள் நீளப்போகும் பயணம். நானும் நிக்கிதாவும், உடன் சில நண்பர்களும்.

நாளை (7/10/23) சிங்கை செல்கிறோம். சுனில் கிருஷ்ணனை அங்கே சந்திக்கிறோம். அங்கே ஒரு நாள் உலாவும் உண்டு. பின்னர் ஹோசிமின் நகரில் வியட்நாம் போர் நடந்த இடங்களையும், பதுங்கு குழிகளையும் பார்வையிட திட்டம். பின்னர் டோக்கியோ. இருபது நாட்கள் அங்கே ஜப்பானில். நண்பர் டோக்கியோ செந்திலை சந்திக்க திட்டம். பின்னர் பஷோ தொடர்பான இடங்களுக்கு பயணிக்கின்றோம் டோக்கியோவிலிருந்து கியோட்டோ அங்கே ஒரு வாரம் ஜென் பூங்காக்களை காண திட்டம். அங்கிருந்து குமோனோ கோடோ என்கிற ஆயிரம் வருட பழமையான புனித யாத்திரை பாதையில் 70 கிலோமீட்டர் நடந்து பயணிக்கிறோம். ஒசாகா வழியாக கொலாலம்பூர் அங்கே இரு நாட்கள். பின்னர் சென்னை.

ஒருவகையான திருச்செலவு இது. உங்களின் புறப்பாடு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்னுள் விதைத்த விதை இந்திய சாலை பயணத்தில் துளிர் விட்டு வருடத்துக்கு பத்தாயிரம் மையில் பயணம் என நீண்டு வளர்ந்து இன்று வழி என்னும் மரமாக ஆகி உள்ளது.

பேரன்பும், பெரும் அவாவுடன் கிளம்பி செல்கிறோம் .எப்போதும் போல் உங்கள் ஆசி உடன் வரும் என எண்ணுகிறேன்.

வளர் நேசத்துடன்,

பரிதி & நிக்கிதா

*

அன்புள்ள பரிதி, நிக்கிதா,

கிழக்கு நோக்கிய பயணம். கிழக்கு ஒரு மாபெரும் ஈர்ப்பு எப்போதுமே. (எழுகதிர்). பயணம் வெற்றிகரமாக ஆகட்டும். வாழ்த்துக்கள்

ஜெ

வழி இணைய இதழ்

முந்தைய கட்டுரைஇரு கேள்விகள்
அடுத்த கட்டுரைகோரை, ஒரு வாசிப்பு