ஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்

எழுத்தாளர் அவர்களுக்கு

கடந்த 22 – 24 தேதிகளில் நடந்த ஓவிய கல்வியில் பயில என் மனைவியுடன் நானும்  சென்று வந்தோம். என் மனைவிக்கு தனக்கு தானே கற்று கொண்ட மண்டலா வரைவது போன்ற ஆர்வங்கள் உண்டு. அவள் இந்த பயிலரங்கை மிக சிறப்பாக எடுத்துக்கொண்டாள். அவளுக்கு சில புதிய நண்பர்களும் அமைத்தார்கள்… பாடம் நடந்த போது  நான் கவனிக்காமல் இருந்தால் என்னை கடிந்து கொண்டாள்.. விழிப்பாக இருந்தாள்.

மணிகண்டன் அவர்கள், ஒரு விதமாக இந்த பயிலரங்கத்தை வடிவமைத்து இருந்தார். முதலில் எது art/ கலை. எதை கலை என்று எடுத்து கொள்ள முடியாது. அடுத்து கலைக்கு பின்னணியில் உள்ளவைகள் epistemology, literature, drama, music, philosopy இவை போல.. அதற்கு பின் art movements – அதாவது குகை ஓவியங்கள், ஆதி கால மன்னர்கள் art / கலை வடிவங்கள் (கிரேக்க, எகிப்திய போன்ற).. என்று தொடங்கி இன்று வரையிலானவை.

வெளியே — ஒரு காலத்துக்கு பின் அடுத்து என்று வரும் தொடர்கள் பற்றிய காணொளிகள், websiteகள் உண்டு.இந்த ஓவியம் பயிலும் வகுப்பின் பெரும் மதிப்பு அதில் மணிகண்டன் செய்து காட்டி இருக்கும் ஒரு நீண்ட பட்டுயிழையின்  தொடர்.

மணிகண்டன் அளிப்பது அந்த அடுக்கு மட்டும் அல்ல.. அவைகளுக்கு பின் உள்ள தத்துவம், அதன் ஆசிரியர்கள், அதில் இருந்து வந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், குறிப்பிட்ட கவிதைகள், முக்கியமான இசை, சில இசை துணுக்குகள், இசை சார்ந்த மனிதர்கள், கோட்பாட்டாளர்கள், பின் அதே தத்துவத்தில் உதித்த ஓவியர்கள், ஓவிய ஆசான்கள் மாஸ்டர்கள், அதன் பின் அந்த கால கட்டத்தின் உச்சமான ஓவியங்கள். பின்னர் வந்த காலகட்டங்களில் புகைப்படங்களும், கலைஞர்களும். கூடவே ஒரு ஒரு காலத்திலும் வாழ்கையை மாற்றி அமைத்த போர்கள், இயக்கங்கள் – இவை எல்லாம் ஒன்றின் மீது ஒன்று செலுத்திய தாக்கம் — இவைகள் எல்லாம்.

தவிர கால அடுக்கை கலைத்து வைத்தால் — ஒன்றை நினைவுறுத்தும் இன்னொன்று என இசைக்கு ஒரு ஓவியம், ஒவியத்துக்கொரு கவிதையோ, சிறுகதையோ என.. ஆசிரியரால் அது வளர்ந்த வண்ணமே சென்றது.

இந்த அடுக்கு அசாத்தியமானது.இதையே தமிழில் நூலாக அவர் கொண்டு வரலாம். இந்த அளவுக்கு செழுமை மிக்க தொகுப்பு ஒன்றை நான் ஆங்கிலத்திலும் பார்த்ததில்லை. மணிகண்டன் அவர்கள் இவைகளை வெறும் பெயர்களாக தரவுகளாக கச்சா பொருட்களாக கொடுப்பதில்லை. மேலதிகமாக ஓவிய கால கட்டங்கள் ஒன்றின் மீது ஒன்று செலுத்திய தாக்கங்களையும் அதில் இருந்து அவைகள் அடைந்த அவதானிப்புகள், வளர்ச்சியையும்; போலவே அடுத்து வந்த காலங்கள் மேல் ஆற்றிய பாதிப்புகளையும் கோர்ததெடுத்து சென்றார். ஆங்காங்கே நாமும் சேர்ந்து இந்த அவதானிப்புகளை வந்தடைய சரியான ஓவியங்களும். சமயத்தில் அவகளின் சிறப்பை அறிய முன்னம் வந்த அல்லது காலத்தில் பின்னர் வந்த ஓவியம்/ கலை வடிவத்தை வைத்து காட்டி விளங்க வைக்கிறார்.

உண்மையில் A V மணிகண்டன் என் வணக்கத்துககுரிய ஆசிரியன்  .இது போன்ற வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு முன் தயாரிப்புகள் உண்மையில் அவசியம் என்று எனக்கு தோன்றுகிறது.

இந்த 2 1/2 நாளில் இது போல குறைந்தது ஒரு 100+ terms, 200+ (நமக்கு பரிச்சயம் இல்லாத) பெயர்கள் .. ஓவியர்கள், தத்துவ ஞானிகள் பெயர்கள், இலக்கிய ஆளுமைகள் பெயர்கள் என்று ஒரு மிக பெரிய பட்டியல் இருந்தது.

(என் அளவுக்கு — மனைவியையும் சேர்த்து கொண்டு, முகாமுக்கு பதிந்த ஒரு இரு நாளிலிருந்து.. youtubeல் உள்ள art movements பற்றிய பதிவுகளை போட்டு பார்த்து பயிலும் 3 நாளில் என்ன என்ன எதிர்பார்க்க முடியும் என்று பார்த்து கொண்டோம்.. கூடவே அங்கு செல்வதற்கான ஒரு ஆர்வமும் வளர்ந்தது பரபரப்பும் கூடியது. ஆனால் எங்கள் தயாரிப்பு கடுகளவு கூட போதாது என்று பாடங்கள் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அறிந்தோம்..)

மலைத்து போகும் அளவுக்கான வேலை, தயாரிப்புகளுடன் அங்கு வந்திருந்தார் ஆசிரியர்.ஒரு ஒரு 1 1/2 மணி நேரமாக அவர் பேசிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. இப்படியே 2 1/2 நாள்..

ஆசிரியர்கள் மேல் அது மிக கடுமையான பளு. அவரிடம் கேட்டேன், அவர் இவ்வளவு சொல்றதுக்கு இருக்குதே என்றார்.. ( தவிர இந்த வகுப்பின் முன்னோட்டதில் ஒரே படம் படமாக உள்ளது என்று தெரியவந்தது போலும்.. ஓவியம் பயில வரும் வகுப்பில் நிறைய ஓவியங்கள் இருக்க தானே செய்யும்.) பயில் அரங்கில் ஆசிரியருக்கு ஒரு color mic இருந்தால் 2 1/2 நாள் ஆசிரியர் பேச மிக வசதியாய் இருக்குமோ என்று தோன்றியது.

ஆசிரியர் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு dance performance போல மேடை முழுக்க போய் போய் வருகிறார். வெள்ளை boardடிலும், (பகலிலும் எப்படியாவது படங்களை காட்டி விடும்) ப்ரோஜக்டரில் தெரியும் ஓவியங்களை விளக்கியும் அவர் மேடை முழுமைக்கும் நிரம்பி இருந்தார்.மூணு நாளும் பகலிலும், மாலை, இரவிலும் தகர கூரை தட தடக்க மழை பெய்தது. அவருக்கும் அவ்வப்போது துளி இளப்பாரல் கிடைத்தது.

2 1/2 நாள் அத்தனை பேருமே ஏதோ ஒரு விதத்தில் ஒவியத்தையே பேசினார்கள்.. ஒரு ஒரு ஓவியத்தை வியந்தார்கள்.. ஒன்றை இது எப்படி art/ கலை ஆகும் என்று விசாரணைகள்.. இப்போது நடந்தது போல உள்ள சில ஓவிய இயக்கங்கள் 1930ல் செய்து இருக்கிறார்களே என ஆச்சர்யங்கள் – என்று 2 1/2 நாட்களுக்குள் நிறைவு அடைந்தது.

மேலதிகமாக சொல்ல அந்தியூர் மணியின் அசராத உழைப்பு உள்ளது. அவர் இந்த பயில் அரங்களிலும் இருந்தார். தண்ணீர் மோட்டார் போட்டார். அளவுகள் எடுத்து pipe connection போட வந்தவர்களுடன் உரையாடி கொண்டு இருந்தார். டீ, காபி, காலை, மதிய, இரவு உணவு தயாராகி விட்டதா என்று பார்த்து கொண்டார். அவ்வப்போது அரங்கை உணவுக்காக முடித்தும் வைத்தார். அரங்கில் 80% நேரம் பாடத்தையும் கவனித்தார் (ஈரோடு கிருஷ்ணனும் அவர் நண்பரும் 23ம் தேதி – சனி மாலை முதல் கலந்து கொண்டார்).

அங்கு இருந்தது அந்தியூர் மணி ஒருவரே அல்ல.. எல்லாரும் வரும் போதும் கிளம்பும் போதும், வென்முரசு போரில் வரும் கடோத்கஜன் போல, அவருடைய cloneகள் அவர் பின்னால் மறைந்து கொள்கிறார்கள்.

இந்த ஓவிய கல்வியில் ஓவிய காலங்களை சொல்ல சொல்ல தொடங்கி ஶ்ரீ பாதம், கௌஸ்துபம் என்று மிக பெரிதாக வளர்ந்த கோபுரங்களுடன் எழும்பிய ஒன்று மணிமுடி வந்த போது சில்லு சில்லாக ஆகி அதனினும் நுணுக்கம் தேடி சென்று கொண்டே இருப்பது போல தோன்றியது.

அவை எல்லாம் எங்கள் பொருட்டு அருளிய ஆசிரியர்களுக்கு பணிவான வணக்கம்

நன்றி

ராகவ்

முந்தைய கட்டுரைநூறுநூறாண்டுகளாக…
அடுத்த கட்டுரையுவன்- வாழ்த்துகள்