வரும் அக்டோபர் 1 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பி அமெரிக்கா செல்கிறேன். ஒரு மாதகாலம் அமெரிக்காவில் இருப்பேன். பல்வேறு ஊர்களில் நிகழ்ச்சிகள் உள்ளன.
இந்தியாவில் நாங்கள் ஒருங்கிணைக்கும் இலக்கியச் சந்திப்பு போல ஒன்றை சென்ற ஆண்டு அமெரிக்காவில் தொடங்கினோம். பூன் என்னும் சிறு குன்றுமேல் ஒரு மலைமாளிகையில் மூன்றுநாட்கள் கூடி விவாதிக்கும் அரங்கு அது. இவ்வாண்டும் அதே பூன் மலைமேல் நிகழ்கிறது. பூன் முகாம் என்று பெயரே அமைந்துவிட்டது.
அக்டோபர் ஆறு முதல் மூன்றுநாட்கள் இவ்விழா நிகழும். ஒருங்கிணைப்பவர்கள் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்கா. இது அமெரிக்காவில் ஒரு பதிவுசெய்யப்பட்ட இலக்கிய அமைப்பு. நான் பங்கேற்கும் நிகழ்வுகளை அறியவும், பூன் முகாமில் பங்கேற்கவும் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்
தொடர்புக்கு: [email protected]
அக்டோபர் இறுதியில் கனடா செல்கிறேன். முதன்மையாக அ.முத்துலிங்கம் அவர்களை பார்ப்பதே நோக்கம். அங்கே அக்டோபர் 21 அன்று ஒரு பொது நிகழ்வு. நான் பேசுகிறேன். நண்பர்களை அழைக்கிறேன்.
தொடர்புக்கு: 905 201 9547 , 416 731 1752 , 512 484 9369