யுவன்- வாழ்த்துகள்

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி

யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி

சிலருக்கு விருதுகள் கிடைக்கும்போது சில சமயம் திருப்தியாக இருக்கும். சில சமயம் நிறைவாக இருக்கும். இம்முறை விஷ்ணுபுரம் விருது அறிவிப்பில் எனக்கு உண்டானது பின்னால் சொன்ன வகை. வாழ்த்துகள் யுவன்!

தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, வேறெதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதி வரும் அவருடைய உழைப்பு அரியது. நான் மதிப்பது. சூழல்களால் கவனத்தை சிதற விடாதவர். வெளிச்சங்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாதவர். (யூடியூப் வந்தபிறகுதான் அதிகம் வெளியே தென்படுகிறார்). மிக கூர்மையாக யோசிப்பவர். பகிர்ந்து கொள்பவர். அதை விட முக்கியமாக உன்னிப்பாக கேட்பவர். தேர்ந்த வாசகர். நல்ல மனிதர். இன்னும் படித்து மாளவில்லை என்று பிரமித்துக்கொண்டே படித்துக்கொண்டே இருப்பவர்.

வெளிப்படையாகவும், நேரடியாகவும், நேர்மையாகவும் உரையாடுவதற்கு சாத்தியமானவர்.

அவரது இலக்கிய உலகம் முழுக்கவும் கதைகளாலானது. யுவன் கதைகள் பற்றி – கதைகளில் அவிழும் மத்ரோஷ்கா பொம்மைகள் – என்று சொல்வனத்தில் 2018 ல் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். நானறிந்த அளவில். ஒளிவிலகல் தொகுப்பு பற்றியும் ஒரு கட்டுரை எழுதினேன்.

விருது அறிவிப்பை ஒட்டி, அவரது எழுத்து பற்றி நண்பர்கள் எழுதும் கட்டுரைகளை கவனமாக படிப்பேன். யுவன் எழுத்தை மேலும் அறிவதற்கு அவை புதிய திறப்புகளை தரக்கூடும்.

விருதுகளுக்குப் பின் ஒரு எழுத்தாளர் தேடி வாசிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அது முக்கியமானதும் கூட. யுவன் மேலும் பரவலாக படிக்கப்பட வேண்டியவர். அவரது கவிதைகள் உட்பட.

சிற்றில் இலக்கிய அமைப்பு 2019-ல் யுவனை கௌரவித்தது. மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், தமிழ்ப் புனைவுலகில் அவரது பங்களிப்புக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் இப்போதாவது கிடைத்திருக்கிறது– அல்லது கிடைக்க ஆரம்பித்திருக்கிறது என்பதே.

ரமேஷ் கல்யாண்

விஷ்ணுபுரம் விருது 2023 பெற உள்ள திரு.யுவன் சந்திர சேகருக்கு வணக்கமும் வாழ்த்துகளும் .

ஜென் மனநிலையை தமிழ் இலக்கியம் என்றாக்கியவர்.

ராயகிரி சங்கர்

வெளிசார் எழுத்துகளின் அடையாளம் தேடும்போது தனியொரு நகரமாகத் தமிழ்ப்பனுவல்களுக்குள் மிதந்துகொண்டிருப்பது மதுரை. செவ்வியல் கவிதைகள் தொடங்கி இப்போது எழுதவரும் மதுரைக்காரர்களின் பனுவல்களுக்குள்ளும் மதுரை ஒரு வெளியாகவும் பண்பாடாகவும் ஆளுமைகளாகவும் நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருதுபெறும் யுவன் சந்திரசேகரின் கதைகளுக்குள்ளும் அதை வாசிக்கமுடியும். சந்திரசேகருக்கு வாழ்த்து

மதுரையின் வாசம்: யுவன் சந்திரசேகரின் இரண்டு கதைகள்

அ.ராமசாமி


 

யுவன், கடிதங்கள்

யுவன், கடிதங்கள்

யுவன் சந்திரசேகர்- கடிதங்கள்

யுவன் சந்திப்பு – சக்திவேல்

யுவன் – விஷ்ணுபுரம்- கடிதங்கள்

யுவன், விஷ்ணுபுரம் விருது -செய்திகள்

யுவன் சந்திரசேகர், விஷ்ணுபுரம் விருது, வாழ்த்துக

முந்தைய கட்டுரைஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்