யுவன், கடிதங்கள்

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி

யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி

சிற்றிதழ்களில் ஆங்காங்கே யுவன் சந்திரசேகர் கதைகளைப் படித்திருக்கிறேனே ஒழிய அவரை ஓர் ஆசிரியராக ஒட்டுமொத்த வாசிப்புக்கு இதுவரை உள்ளாக்கியதில்லை. தமிழ் விக்கியில்தான் அவரைப்பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை அடைந்தேன். மிக விரிவாகவே அவரைப்பற்றி எழுதப்பட்டுள்ளது. அவருடைய முக்கியமான நூல்களைப் பற்றிய விரிவான சித்திரமும் தமிழ் விக்கி வழியாகக் கிடைத்தது. இவ்வளவு விரிவான பதிவுகள் எழுத்தாளர்களைப் பற்றி இருப்பது மிக அவசியமான ஒன்று. அவருடைய படைப்புகளை இனி தொடர்ச்சியாக வாசிக்கவேண்டும் . விஷ்ணுபுரம் விருதுக்கு நன்றி

பி.ஆர்.எஸ். மாதவன்

அன்புள்ள ஜெ

யுவன் சந்திரசேகரின் கதைகளை பற்றிய பேச்சு போய்க்கொண்டிருந்தது. விஷ்ணுபுரம் விருது அவரைப்பற்றிய ஓர் ஆர்வத்தை உருவாக்கியிருக்கிறது. இவ்வாறு தொடர்ச்சியாக எழுத்தாளர்களை முன்வைத்து ஒரு பெரிய கவனத்தை விஷ்ணுபுரம் விருதும் உங்கள் இணையதளமும் இணைந்து உருவாக்கி வருகின்றன. இது மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம். உங்களுக்கு வாசகனாக நன்றி சொல்லவேண்டும். யுவன் கதைகளிலுள்ள சிறப்பு என்ன என்று என்னிடம் கேட்டார்கள். நான் இவ்வளவுதான் சொல்லமுடிந்தது.

நம்முடைய தமிழிலக்கியம் இரண்டாகப்பிரிந்து இருந்தது. ஒன்று வணிக எழுத்து. இன்னொன்று தீவிர இலக்கியம். வணிக இலக்கியத்தில்தான் திகில், திகைப்பு, காதல், மர்மம் எல்லாம் இருந்தது. அதற்கு நேர் மாறாக தீவிர இலக்கியம் இரண்டே வகைதான். ஒன்று டாக்குமெண்டேஷன். அதிலே பூமணியின் பிறகு நீலபத்மநாபனின் தலைமுறைகள் அசோகமித்திரனின் தண்ணீர் போல கிளாஸிக்ஸ் எல்லாம் உண்டு.ஆனாலும் அவையெல்லாமே உண்மையை அப்படியே காட்டுகிற நாவல்கள்தான். இன்னொரு பக்கம் ஆழ்மன விசாரங்களை எழுதும் படைப்புகள். மௌனி நகுலன் முதல் சுந்தர ராமசாமி வரை எல்லாரும் அப்படித்தான் எழுதினார்கள்.

ஆனால் கதை என்றாலே அதில் கொஞ்சம் வியப்பு இருக்கவேண்டும். அந்த அம்சம்தான் இன்றைக்கு வரை கதைகேட்க வைக்கிறது. கதை வாழ்க்கை இல்லை. வாழ்க்கையைவிட கொஞ்சம் கூடுதலாகவே கதையிலே இருக்கவேண்டும். அந்த கற்பனை அம்சம் இலக்கியக்கதைகளிலே மிகக்கம்மியாக இருந்தது. ஆகவே உற்சாகமான வாசிப்புக்கு இலக்கியத்திலே பெரிய இடமில்லாமல் இருந்தது.

அந்த காலகட்டம் முடிந்தபிறகு வந்த எழுத்தாளர்களில் யுவன் சந்திரசேகர் முக்கியமான ஒருவர். பழைய இலக்கியக்கதைகளின் சலிப்பான யதார்த்தமும் அகவிசாரமும் இல்லாத கதைகளை அவர் எழுதினார். மர்மம் சுவாரசியமெல்லாம் உள்ள கதைகள். அவருடைய எல்லா கதைகலிலுமே வியப்பு என்கிற அம்சம் உண்டு. நிறைய கதைகள் ஒரு வியப்பின் தருணத்திலே நின்றுவிடும் படைப்புகள். அந்த வியப்பு அம்சம் அதற்கு முன் வணிக இலக்கியத்தில்தான் இருந்தது. அதை இலக்கியத்தரமாகக் கொண்டுவந்தவர் யுவன் சந்திரசேகர். அதுதான் அவரோட சாதனை என்று நான் சொன்னேன்.

யுவன் சந்திரசேகருக்கு வாழ்த்துக்கள்

சிவக்குமார் எஸ்

அம்புள்ள ஜெ,

நான் யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் நாவலை வாசித்தேன். லாப்சிங் ராம்பா எழுதிய திபெத் மர்மக்கதைகளை வாசித்துள்ளேன். அந்த வகை எழுத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அந்த வகை எழுத்து வாசகனை ஒருவகையில் ஏமாற்றுகிறது. யுவன் சந்திரசேகர் எல்லாவற்றையும் கதையாக ஆக்கி வாசகனுடன் விளையாடுகிறார். அந்த ஆட்டம்தான் இதை உயர்ந்த இலக்கியமாக ஆக்குகிறது என நினைக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்

சிவசண்முகம்

யுவன், கடிதங்கள்

யுவன், கடிதங்கள்

யுவன் சந்திரசேகர்- கடிதங்கள்

யுவன் சந்திப்பு – சக்திவேல்

யுவன் – விஷ்ணுபுரம்- கடிதங்கள்

யுவன், விஷ்ணுபுரம் விருது -செய்திகள்

யுவன் சந்திரசேகர், விஷ்ணுபுரம் விருது, வாழ்த்துகள்

முந்தைய கட்டுரைதொடர்- கடிதம்
அடுத்த கட்டுரைஒயில் கும்மி