ஜி. நாகராஜன்

ஜி.நாகராஜன் முறையாகவும் சீராகவும் எதையும் எழுதவில்லை, அவருடைய வாழ்க்கைமுறை அதற்கு உகந்ததாக இல்லை. ஏராளமான கைப்பிரதிகளை வெவ்வேறு இடங்களில் தொலைத்துச் சென்றிருக்கிறார். அதில் பிறருடைய கைப்பிரதிகளும் அடக்கம். அவருடைய படைப்புகள் முறையாக வாசகர்களைச் சென்றடையவுமில்லை. ஆகவே எண்பதுகளில் முழுக்க மறக்கப்பட்டவராகவே இருந்தார். 1982ல் சி.மோகன் முயற்சியில் க்ரியா பதிப்பகம் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே என்னும் நாவலை அழகிய பதிப்பாக, சுந்தர ராமசாமி எழுதியதாகக் கருதப்பட்ட ஒரு வாழ்க்கைக்குறிப்புடன் வெளியிட்டது.

மிகக்கூர்மையான மொழியில் சொல்லப்பட்ட ஜி.நாகராஜன் பற்றிய அந்த வாழ்க்கைக்குறிப்பு ஜி.நாகராஜனுக்கு வசீகரமான ஓர் ஆளுமைச்சித்திரத்தை அளித்தது. சிற்றிதழ்சார்ந்த வாசகர்கள் நடுவே அவர் புகழ்பெற்றார். தொடர்ந்து அவருடைய குறத்தி முடுக்கு நாவலும், சிறுகதைகளும் மறுபிரசுரம் ஆயின. அன்றுமுதல் இன்றுவரை ஜி.நாகராஜன் தமிழிலக்கியத்தில் தொடர்ந்து பேசப்பட்டுவரும் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக நீடிக்கிறார்.

ஜி.நாகராஜன்

ஜி.நாகராஜன்
ஜி.நாகராஜன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையுவன் கதைகள் பற்றி…
அடுத்த கட்டுரைபாலை மலர்ந்தது -1