பெண்கள் மட்டும்: யோகப்பயிற்சி முகாம்
பெண்கள் மட்டும் யோக முகாம் பற்றி இரண்டு ஐயங்கள் கேட்கப்பட்டன.
ஒன்று, ஆண்கள் துணையாக வரலாமா?
வரலாம். தங்கலாம். ஆனால் பார்வையாளராகக்கூட யோகப் பயிற்சியில் பங்கெடுக்கலாகாது. அறைகளில் தங்கலாம், வெளியே உலவலாம். பங்கேற்புக்கான முழுக் கட்டணமும் கட்டவேண்டும்
இரண்டு, முதிய பெண்கள், உடற்சிக்கல்கள் கொண்டவர்கள் வரலாமா? கடுமையான பயிற்சியா?
அனைவரும் வரலாம். மிக உடற்சிக்கல்கள் கொண்டவர்கள் தவிர்க்கலாம். பயிற்சிகள் ஒவ்வொருவருன் உடல்நிலையை கருத்தில்கொண்டே அளிக்கப்படும். நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு செய்யும் பயிற்சிகளும் உண்டு. கடுமையான பயிற்சிகள் யோக முறையில் பொதுவாக அளிக்கப்படுவதில்லை. மிகமிக மெல்ல உடலை பழக்குவதுதான் யோகம். மூட்டுவலி, பருமன் உள்ளிட்ட சிக்கல்கள்கொண்டவர்கள் கலந்துகொள்ளலாம். பயனளிக்கும். அவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளும் உண்டு.