வேணுகோபால் -கடிதம்

மலையில் ஒரு தொடக்கம்…

அன்புள்ள ஜெ

சோளகனை சிற்றூரில் சூரியமின்சாரத்தால் அமைக்கப்பட்ட அரவை இயந்திரம் பற்றிய செய்தியைக் கண்டேன். அற்புதமான பணி. அந்த பணியைச் செய்து முடித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அந்த மக்களுக்கு அவை உதவியாக இருக்குமென நினைக்கிறேன்.

செண்பகா குமாரசாமி

அன்புள்ள குமாரசாமி,

மலைப்பகுதிகளில் மின்சாரம் என்பது பெரும் சிக்கல். நெடுந்தொலைவுக்கு கம்பி செல்லவேண்டும். அதில் மின்னழுத்தக் குறைபாடு எப்போதுமுண்டு. மின்கம்பிகள் அறுந்துவிடுவதும் அடிக்கடி நிகழும். அப்பகுதிகளுக்கு இத்தகைய சூரியமின்சாரம் மிகப்பெரிய ஒரு வாய்ப்பு.

சோளகனை பழங்குடிச்சிற்றூர் பொருளியல் சார்ந்து மிகமிகப் பிற்பட்டது. அம்மக்களால் சிறிய விஷயங்களைக்கூட சுயமாகச் செய்ய இயலாது. அங்கே முன்னெடுக்கப்பட்ட இப்பணி அவர்களுக்கு ஒரு பேருதவியாக இருக்கும்.

இப்பணியை முதன்மையாகச் செய்து முடித்தவர் வேணுகோபால். இவர் பழங்குடி – தலித் சிற்றூர்களுக்கு இப்படி ஒரு சேவையைச் செய்வதை தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருகிறார். ஈரோட்டில் மின்சார நீர் இறவை இயந்திரம் நிறுவும் தொழில் செய்து வருகிறார்.இது அவருடைய பொதுச்சேவை. யான் அறக்கட்டளை நிதிபெற்று இப்ப்ணியை முடித்துள்ளார்

ஜெ

வேணுகோபால் முகநூல் பக்கம்

ஆஸ்கர் சோலார் பம்ப் நிறுவனம்

முந்தைய கட்டுரையுவன் சந்திப்பு – சக்திவேல்
அடுத்த கட்டுரைதனியிடத்தில் நிகழ்பவை- கடிதங்கள்