யுவன், விஷ்ணுபுரம் விருது -செய்திகள்

யுவன் விருது – மலேசியச் செய்தி

யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது குறித்து மலேசியாவில் முதன்மை மலாய் இலக்கிய இதழான ‘டேவான் சாஸ்திரா’வின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் வெளிவந்துள்ளது. மேலும் யுவன் சந்திரசேகர் நவம்பரில் நடக்கும் GTLF நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்தும் டிசமபரில் நடைபெறும் விஷ்ணுபுரம் விழா குறித்தும் இந்தக் கட்டுரை விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

யுவன் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கிய பங்களிப்பையும் இக்கட்டுரைச் சொல்வதோடு அவரை மாய எதார்த்த எழுத்தாளர் என வரையறை செய்துள்ளது. மலேசியாவில் நடக்கும் அனைத்துல அரங்கில் நவம்பர் 25 – 26ஆம் திகதிகளில் யுவன் கலந்துகொள்ளும் முன்னர் அவர் குறித்த விரிவான அறிமுகம் மலாய் வாசகர்கள் மத்தியில் சென்று சேர்ந்திருப்பது பெருமைக்குரியது.

ம.நவீன்

மலேசியா

ஆசிரியருக்கு வணக்கம்.

இந்த வருடம் விஷ்ணுபுரம் இலக்கிய விருதுக்கு யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

shruti.tv சேனலில் யுவன் சந்திரசேகர் பேசிய காணொளிகள் தொகுக்கப்பட்டு playlist உருவாக்கியுள்ளேன்.

அது தங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.

நன்றி

கபிலன்

முந்தைய கட்டுரைகிருஷ்ணன் நம்பி
அடுத்த கட்டுரைசனாதனம், சனாதன எதிர்ப்பு