கிப்ட் சிரோமணி

டாக்டர் கிஃப்ட் சிரோமணி, சு. தியடோர் பாஸ்கரனின் நண்பர். பாஸ்கரனின் பல ஆய்வு முயற்சிகளை ஊக்குவித்தவர். கிஃப்ட் பற்றி சு. தியடோர் பாஸ்கரன், “கிஃப்ட், பன்முக ஆய்வாளர். எளிமையின் உரு. தன் மேதைமையைக் காட்டிக் கொள்ளவே மாட்டார். தொல்லியல் தடங்களைத் தேடி மோட்டார் பைகில் மாமல்லபுரம், காஞ்சிபுரம் என சுற்றி வருவார். அறிவியல் ஆய்வே தனது வாழ்வின் குவிமையம் என்று உறுதிபட நம்பிய கிஃப்ட், அக்கல்லூரியின் முதல்வராகும் வாய்ப்பு வந்த போது, அதை ஒதுக்கி விட்டு ஆய்வில் தனது கவனத்தைச் செலுத்தினார். கணினி பயன்பாட்டிற்கும் தமிழ் மொழி ஆராய்ச்சிக்கும், தமிழக கலை வரலாற்றிற்கும் இவரது பங்களிப்பு இன்னும் சரியானபடி உணரப்படவில்லை” என்கிறார்.” பல சர்வதேச இதழ்களில் கணினித் தொழில் நுட்பம் குறித்து எழுதிய முதல் இந்தியர் மற்றும் தமிழராக அறியப்படுகிறார் கிஃப்ட் சிரோமணி.

கிப்ட் சிரோமணி

கிப்ட் சிரோமணி
கிப்ட் சிரோமணி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையுவன் சந்திரசேகர், விஷ்ணுபுரம் விருது, வாழ்த்துகள்
அடுத்த கட்டுரைமலையில் ஒரு தொடக்கம்…