குருகு ஏழாவது இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் பா. ஜம்புலிங்கம் அவர்களது நேர்காணல் இடம்பெறுகின்றது. ஜம்புலிங்கம் முப்பதாண்டு காலமாக புத்தர் சிலைகளை தேடி ஆவணப்படுத்தி வருகிறார். அவற்றை தொகுத்து “சோழநாட்டில் பௌத்தம்” என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டியிருந்தார்.
முப்பது ஆண்டுகாலம் உழைத்து சமஸ்கிருத -ஆங்கில அகராதியை உருவாக்கிய அறிஞரான மோனியர் வில்லியம்ஸின் வேதக்கடவுள்கள் என்னும் கட்டுரை முதன்முறையாக தமிழில் குருகு இதழின் வழியாக வெளிவருகிறது.
கன்னட இலக்கியத்தின் முக்கியமான ஆளுமை, கவிஞர் எச். எஸ். சிவபிரகாஷின் குரு நூலிலிருந்து மனம் குறித்த கட்டுரை இந்த இதழில் வந்திருக்கின்றது.
ஆடல் கட்டுரை சம்பந்தரின் வார்ப்புருவோடு அவரது இறைமையாக்கத்தை ஆய்வு செய்கிறது.
அறிவியல் மற்றும் தெய்வ தசகம் தொடர்களும் இதழில் இடம்பெற்றிருக்கின்றன. சென்ற இதழான தமிழ் விக்கி – தூரன் சிறப்பிதழுக்கு கிடைத்த வாசக எதிர்வினைகள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது . ஒவ்வொரு குருகு இதழையும் முந்தையதை விட சிறப்பான ஒன்றாக செய்தளிக்க முயற்சிக்கிறோம். நன்றி.
குருகு இணைய இதழ் வாசிக்க
பிகு- குருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும். https://twitter.com/KuruguTeam
அன்புடன்
குருகு