அறம் ஆங்கில மொழியாக்கம்- சர்வதேச மொழியாக்க விருது நீள்பட்டியலில்

அறம் வாங்க

அறம் மின்னூல் வாங்க


Stories of the True வாங்க

அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் நடத்தும்  தேசிய மொழிபெயர்ப்பு விருதுக்கான நீள்பட்டியலில் அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories of the True இடம்பெற்றுள்ளது. இச்செய்தியை மொழிபெயர்ப்பாளர் பிரியம்வதா ராம்குமார் தெரிவித்தார். இப்பட்டியலில் இடம்பெறும் முதல் தமிழ் நூல் இது. விரைவில் இந்நூலின் சர்வதேச பதிப்பும் வெளிவரும்.

இத்தருணத்தில் இம்மொழியாக்கத்தை தன் தனியொரு ஊக்கத்தால் முன்னெடுத்த பிரியம்வதா ராம்குமாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜெ

பிரியம்வதா

அன்புள்ள ஜெ,

ஒரு மகிழ்வூட்டும் செய்தி. Stories of the True, அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் (American Literary Translators Association) நடத்திவரும் சர்வதேசிய மொழிபெயர்ப்பு விருதுஉரைநடை (National Translation Award – Prose) 2023க்கான நீள்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.  

ஆண்டுதோறும் சிறந்த கவிதை மற்றும் உரைநடை ஆக்கங்களை உயிர்ப்போடு, அதன் கலை சக்தி குன்றாமல் ஆங்கிலத்தில் மீள் உருவாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

1998 இல் நிறுவப்பட்ட இவ்விருது, மூலநூலையும் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு, அம்மதிப்பீட்டை கருத்தில் கொள்ளும் ஒரே பரிசு. 2015ஆம் ஆண்டு முதல் கவிதை மற்றும் உரைநடைக்கு தனித்தனி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. NTA வெற்றியாளர்களுக்கு ALTA தலா $4,000 வழங்கும்.

சர்வதேச விருதுகள் பெரும்பாலும் இந்திய பதிப்பாளர்கள் பிரசுரிக்கும் நூல்களை ஏற்றுக்கொள்வதில்லை (. International Booker Prize-க்கு UK அல்லது அயர்லாந்து நாட்டு பதிப்பகத்தார் வெளியிடும் நூல்களை மட்டுமே ஏற்கிறது. National Book Award for Translated Literature-க்கு, அமெரிக்க பதிப்பகத்தார் வெளியிடும் நூல்களை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.) எனவே ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யும் இந்திய மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு NTA ஒரு அரிய வாய்ப்பாகவே உள்ளது.  

இவ்வருடத்தின் NTA-prose நீள்பட்டியலை இங்கே காணலாம் https://literarytranslators.wordpress.com/2023/09/01/announcing-the-longlists-for-the-2023-national-translation-awards-in-poetry-and-prose/.

இதைத் தேர்வு செய்தது சர்வதேச புகழ்பெற்ற ஐந்து மொழிபெயர்ப்பாளர்களாளான நடுவர் குழு (Natascha Bruce, Shelley Frisch, Jason Grunebaum, Sawad Hussain, and Lytton Smith). Stories of the True-வைத் தவிர இந்தியாவிலிருந்து வள்ளி என்ற மலையாள நாவலின் மொழியாக்கமும், “Life And Political Reality: Two Novellas” என்ற வங்காள மொழி நூலும் நீள்பட்டியலில் இவ்வருடம் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன் 2021-இல் கன்னட எழுத்தாளர் ஜெயந்த் காய்கினியின் சிறுகதை தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக (No Presents Please: Mumbai Stories) தேஜஸ்வினி நிரஞ்சனா அவர்கள் இவ்விருதை பெற்றார். NTA prose-விருது பட்டியலில் இடம் பெரும் முதல் தமிழ்ஆங்கில மொழியாக்க நூல் Stories of the True என்றே நினைக்கிறேன். [ALTA நடத்தி வரும் மற்றுமொரு கவிதை மொழியாக்க விருது Lucien Stryk Asian Translation Prize. அதை 2021-ஆண்டு அர்ச்சனா வெங்கடேசனுடைய ”Endless Song” என்ற நம்மாழ்வார் திருவாய்மொழி மொழியாக்கத்துக்கு வழங்கப்பட்டது.]

Stories of the True, ஆகஸ்ட் 2022-வில் வெளிவந்தது. இரண்டு பதிப்புகள் விற்பனையாகி விட்டது இப்பொழுது இந்நூல் விமர்சக அங்கீகாரத்தையும் பெற்றிருப்பது மேலும் நிறைவளிக்கிறது.

அமெரிக்காவில் வெளிவரும் நூல்களில் 3% மற்றுமே மொழியாக்க நூல்கள். அதில் விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் தமிழிலிருந்து வரும் நூல்கள் உள்ளன. அவ்வகையில் பார்க்கும் போது, NTA போன்ற விருதுகளின் அவசியமும் முக்கியத்துவமும் புரிகிறது. அன்பும் நன்றியும்,

ப்ரியம்வதா

இணைப்புகள்:

https://literarytranslators.org/awards/national-translation-award

நடுவர் குழுவைப் பற்றி இங்கே:  https://docs.google.com/document/d/e/2PACX-1vQKcoV2fXP55tsyTYNMBD0byC_FHNl5ZApZz4pzfAYdQemZKud3hEDC8TGqotHIVGNEGmXRDPi4kha6/pub.

Stories of the True தொகுதியைப் பற்றி நடுவர்களின் மதிப்ப்பீடு. 

அறம் கதைகள்

அறம் கதைகள் வாங்க

முந்தைய கட்டுரைதகடூர் கோபி
அடுத்த கட்டுரைநாவலெனும் கலைநிகழ்வு – லக்ஷ்மி சரவணக்குமார்