போர்க் ரோஸ்ட், அஜிதன்

அஜிதன் டிவிட்டரில் தொடர

ஐம்புலன்களில் முதுமையில் தளராமல் எஞ்சுவது நா ஒன்றே. முதியோர் சுவைகளுக்காக ஏங்குவதைக் கண்டுள்ளேன். மனிதனின் இறுதிவிருப்பம் பெரும்பாலும் ஏதாவது ஓர் உணவாகவே இருக்கிறது. மனிதனின் மற்ற புலனின்பங்கள் எல்லாமே வளர்த்துக்கொள்ள வேண்டியவை, பயிலவேண்டியவை, கற்பனையும் அறிவும் இணைந்தவை. நாச்சுவை முற்றிலும் உயிரியல்பு சார்ந்த ஒன்று. ஆகவே முழுக்க முழுக்க உலகியல் சார்ந்தது. ஐம்புலன் சார் கலைகளில் ஆன்மிகமான அம்சம் சற்றுமில்லாதது சமையல்தான்.

ஆனால் அது முழு உண்மை அல்ல. நாச்சுவை கூர்கொண்டிருப்பது இளமையில். அது இவ்வுலகின் சுவை. நாம் இங்கு நம்மை உணர்வது நாவென. இவ்வுலகை நாமென ஆக்குவது நாவினூடாக. நாக்கு உருவாக்கும் நினைவுகள் அழியாதவை. நாக்குடன் இணைந்துள்ள நினைவுகள் மிகமிக ஆழமானவை. ஓர் உணவுச்சுவை சட்டென்று ஒருவனை காலவெளிக்கு அப்பால் கொண்டு சென்றுவிடக்கூடும்.

என் உறவினர் ஒருவர் சாகும்தருவாயில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் திரிபலாதி சூரணத்தை, குழந்தைக்கு கொடுப்பதுபோல தேனில் குழைத்துத் தரும்படிக் கோரினார். அப்போது அவர் எண்பத்திரண்டு வயதானவர், உள்ளிருந்து சுவைத்த நாக்குக்கு ஒருவயது நினைவு.

அஜிதனின் சிறுகதை  ஓர் இழந்த காதலை, இழந்த வாழ்வை, இழந்த சுவைக்கான இறுதித்தவிப்பை இயல்பான நகைச்சுவையுடன் சொல்கிறது

போர்க் ரோஸ்ட் 

முந்தைய கட்டுரைவிரிதழல் – ஒரு வாசிப்புப் பயிற்சியின் தேவை.
அடுத்த கட்டுரைநா.காமராசன்